மகாலட்சுமி வீட்டில் குடியிருக்க குடும்ப பெண்கள் செய்ய வேண்டியது

mahalakshmil

சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்கள் வீட்டில் பணம் சேருவதே இல்லை மாறாக வரவுக்கு மீறி செலவுகள் இருக்கும். வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் நினைத்தால் இந்த நிலையை மாற்றலாம். வாருங்கள் அது எப்படி என்பதை பார்ப்போம்.

  • விடியற்காலையிலேயே படுக்கையை விட்டு எழ வேண்டும். பிரம்ம முகூர்த்தமான விடியற்காலை நேரத்தில் தான் தேவர்களும், முன்னோர்களும் நம் வீடு தேடி வருவார்கள். அந்த நேரத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் எழுந்து வீட்டின் கதவை திறந்துவைத்து மகாலட்சுமியே தாயே வருக வருக என மூன்று முறை கூறி மகாலட்சுமியை வரவேற்க வேண்டும்.
  • காலை 6 மணிக்குள் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட்டு வீட்டு வாசலை மங்களகரமாக்கவேண்டும். அதே போல் மாலை நேரங்களில் தூங்கக்கூடாது. 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
  • விளக்கு வைத்த பிறகு குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது, தலைவாருதல் பேன் பார்த்தல் போன்றவற்றையும் செய்யக்கூடாது.
  • விளக்கு வைத்த பிறகு யாருக்கும் கடன் கொடுக்கவே கூடாது. வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பால் போன்றவற்றை கூட கடனாக கொடுக்கக்கூடாது.

  • வீட்டில் எப்பொழுதும் பால் பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பெண்கள் தங்களின் நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி, தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
  • செய்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தலைக்கு குளிக்கவேண்டும். சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கக்கூடாது.

வீட்டில் உள்ள பெண்கள் இதை கடைபிடித்தால் நிச்சயம் வீட்டில் செல்வம் சேரும்.