மரணத்திற்கு பிறகு எங்கு செல்வோம். மரணித்து பிழைத்தவர்களின் அனுபவம்

yaman-dharmaraj-mantra

ஒரு பிறப்பின் முடிவாக மரணம் கருதப்பட்டாலும், சிலர் மரணித்து உயிர்பெற்ற அதிசயங்களும் இந்த உலகில் நிகழ்ந்துள்ளது. அப்படி உயிர் பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை கூறுகையில் சில ஒற்றுமைகளும் அதில் இருந்துள்ளது. வாருங்கள் அப்படி உயிர் பெற்ற சிலரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 1954ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணி அளவில் மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு இறுதி சடங்கு  செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்க துவங்கின. ஆனால் அவர் இறந்த மூன்று மணி நேரம் கழித்து திடுக்கிட்டு கண் விழித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் அலரதுவங்கினர். சாவுபடுக்கையில் இருந்து எழுந்த அவர் எதையோ பார்த்து மிரண்டு போனவர் போல இருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரிடம் மெதுவாக பேச துவங்கினர். உங்களுக்கு என்ன நடந்தது? எப்படி மீண்டும் உயிர் பெட்ரிறீர்கள்? இப்படி பல கேள்விகளை அடுக்கினார். அவர் அதற்கான பதில்களை கூற துவங்கினார்.

காலையில் எனோ என் உடல் பயங்கர சோர்வடைந்தது. என்னால் அசைய கூட முடியாத அளவிற்கு என் உடலில் ஏதோ இனம்புரியாத வலி ஏற்பட்டது. அந்த சமயத்தில் திடீரென என் எதிரே மூன்று பேர் வந்து நின்றனர். அவர்கள் என்னை என் உடலுக்குள் இருந்து இழுத்தனர். என் உடலை விட்டு நான் வெளியே வந்ததும் படுக்கையில் கிடந்த என் உடலை என்னால் தெள்ள தெளிவாக பார்க்க முடிந்தது. அதன் பிறகு அவர்கள் மூவரும் சேர்ந்து என்னை எங்கோ கூட்டி சென்றுகொண்டிருந்தனர். அச்சமயத்தில் அவர்களுள் ஏதோ புரியாத பாஷையில் பேசிக்கொண்டனர். திடீரென அவர்கள் என்ன பேசி முடிவெடுத்தார்களோ தெரியவில்லை, என்னை  மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு சென்றனர். அதன் பிறகு தான் நான் எழுந்து உட்கார்ந்தேன் என்றார்.

அடுத்ததாக, இதே மாதிரி மற்றொரு நிகழ்வு அபுதாபியிலும் நிகழ்ந்துள்ளது. கடந்த 1975ம் ஆண்டு  ஜனவரி மாதம், இதய நோய் கராணமாக முப்பது வயதுடைய ஒரு ஆண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டனர். அதனால் மருத்துவர்கள் அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். அவருக்கான இறுதி சடங்கு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் திடீரென அவர் உயிர் பெற்று எழுந்து அமர்ந்தார். அதை கண்டு அவரது உறவினர்கள் பிரமிப்பு அடைந்தனர். மரணித்து மீண்டும் எழுந்த அவர் இரண்டு நாட்கள் ஏதோ பித்து பிடித்தவர் போல இருந்தார். யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தனிமையில் இருந்த அவர், இரண்டு நாட்கள் கழித்து தனுக்கு நடந்தவற்றை பிறரிடம் கூற துவங்கினார்.

- Advertisement -

நான் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டபோது என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவர்கள் போராடினர். என் மீது பல கருவிகளை வைத்து என்னனென்னவோ செய்தனர். ஆனால் எனக்கோ உள்ளுக்குள் ஒரு விதமான பயம் அதிகரித்தது. அந்த சமயத்தில் மூன்று பேர் என் முன்னே வந்து, வா போகலாம் என அழைத்தனர். நானும் எதை பற்றியும் யோசிக்கலாம் அவர்கள் அழைத்தவுடன் அவர்களோடு செல்ல படுக்கையை விட்டு எழுந்தேன்.

அப்போது என் உடலில் பல கருவிகள் மாட்டப்பட்டிருந்ததை கண்டு எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் சில நொடிகளில் அவர்கள் மூவரும் என்னை அங்கிருந்து அழைத்துச்சென்றனர். அவர்கள் என்னை கூட்டி சென்ற பாதை இருள் சூழ்ந்ததாக இருந்தது. அது ஒரு பாதாள சுரங்கமா இல்லை விண்வெளியா என்று என்னால சரியாக கூற இயலவில்லை. ஆனால் அந்த சூழல் எனக்கு ஒரு வித திகிலை உண்டாக்கியது. திடீரெண்டு ஒரு நறுமணம் எனக்கு வீச துவங்கியது. இது வரை நான் அனுபவிக்காத ஒரு நறுமணம் அது. அப்போது என்னை அவர்கள் ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். அந்த அரை முழுக்க வெளிச்சமும், குளிர்ச்சியும் இருந்தது. திடீரெனெ தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்ட அவர்கள் என்னை மீண்டும் கொண்டு வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர். அவர்கள் தள்ளிய வேகம் எனக்கும் மிக பெரிய ஒரு பயத்தை உண்டாக்கியது அதனால் நான் என்னை மறந்து பிரமையில் ஆழ்ந்துவிட்டேன் என்று திகிலோடு அவர் தனது மரண அனுபவத்தை கூறி முடித்தார்.

இதையும் படிக்கலாமே 
தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும் மழைபெய்யவும் நாம் செய்யவேண்டிய வழிபாடுகள் !

English overview:
Here we have maranathirku pin enna nadakkum. We have details of maranathirku pin manithanin nilai too.