உங்கள் ராசியின் தீய குணாதிசயங்கள் என்ன தெரியுமா ?

astrology

பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில தீய குளங்கள் இருக்கும். அது கோபமோ, பேராசையோ, சுயநலமோ  எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதன்படி உங்கள் ராசிக்கு எந்த குணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
meshamமேஷ ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அவர்களுக்கு மிருகத்தனமான கோபம் இருக்கும். பிடிக்காத நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது, அமைதியாக இருப்பது போன்ற முகபாவம் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் கோபக் கனலுடன் குமுறிக் கொண்டிருப்பார்கள். ஆகையால் இவர்கள் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

ரிஷபம்
rishabamரிஷப ராசிக்காரர்களுக்கு பிடிவாதம், பேராசை போன்றவை இருக்கும். ஆனால் அது ஒரு பொருள் அல்லது நபரின் மீது அதீத பற்றுக் கொள்வது மற்றவர்கள் உங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க காரணியாக இருக்கிறது. ஆகையால் இதுபோன்ற குகனத்தை நீங்கள் மாற்றிக்கொள்வது சிறந்தது.

மிதுனம்
midhunamமிதுன ராசிக்காரர்கள் சூழ்நிலை மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருப்பார்கள். அது மற்றவர்களுடைய உறவில் உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் சரியான நிலைப்பாட்டை எடுத்து அதில் நீங்கள் உறுதியாக நிற்பது நல்லது.

கடகம்
kadagamகடக ராசிக்காரர்கள் மகிழ்ச்சி, கோபம், அழுகை என்று எதுவாக இருப்பினும், உடனடியாக அதிகப்படியாக வெளிப்படுத்திவிடுவர்கள். அது பல நேரங்களில் பிரச்னையை ஏற்படுத்திவிடும். ஆகையால் இதுபோன்ற குகனத்தை இவர்கள் மாற்றிக்கொள்வது சிறந்தது.

சிம்மம்
simmamசிம்ம ராசிக்காரர்கள், கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். நான் தான் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராசை போன்ற உணர்வுகளை கொண்டவர்களாக இருப்பார்கள். அது அவர்களின் நண்பர்கள் மத்தியில் உள்ள உறவை பாதிக்கும்.

- Advertisement -

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும். இது இவர்களின் வளர்ச்சியை, உறவுகளை, உற்பத்தி திறனை வெகுவாக பாதிக்கச் செய்யும். ஆகையால் இவர்கள் தன்னை தானே தாழ்வாக நினைப்பதை நிறுத்திக்கொள்வது நல்லது.

துலாம்
thulamதுலாம் ராசிக்காரர்கள் எந்த செயலை செய்வதற்கும் பெரிதாய் தயங்குவார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இதை செய்யலாமா வேண்டாமா? என்ற யோசனையில் பாதி நாட்கள் கடந்துவிடும். இதுவே இவர்களின் தீய குணமாகும். அதை இவர்கள் மாற்றிக்கொள்வது சிறந்தது.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசிக்காரர்கள் ரகசியமாகவே இருப்பார்கள். பிறரை அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொள்வது, ஆக்ரோஷமாக செயல்படுவது போன்றவை இவர்களின் நெருக்கமான உறவில் விரிசலை ஏற்படுத்தும். ஆகையால் இதுபோன்ற குகனத்தை இவர்கள் மாற்றிக்கொள்வது சிறந்தது.

தனுசு
dhanusuதனுசு ராசிக்காரர்கள் கலாச்சாரம், ஆன்மீகம், அமைதி என்று தனிமையில் இனிமை காணும் நபர்களாக திகழ்வார்கள். இது இவர்களது பொதுவான குணாதிசயங்களில் ஒன்று. இதனால் இவர்களை சுற்றியுள்ளவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள்.

மகரம்
magaramமகர ராசிக்காரர்கள் தொழில், படிப்பு, வேலை என்று அனைத்திலும் போட்டி மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். லட்சிய பயணம் என்ற பெயரில் இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்களை மறந்துவிடுவது இவர்களின் தீய குணமாகும்.

கும்பம்
kumbamகும்ப ராசிக்காரர்கள் அனைத்து செயல்பாடுகளிலும் தனித்தே ஈடுபடுவார்கள். இதனால் இவர்களை சுற்றி மற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.

மீனம்
meenamமீனம் ராசிக்காரர்கள் சுதந்திரமாக எதையும் யோசிக்க மாட்டார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கையில் உறுதியற்ற மற்றும் சந்தர்ப்பவாத மனோபாவம் பேரழிவை உண்டாக்கும்.

இந்த ராசி பலன் பொதுவானதே. அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் மாறுதல்கள் இருக்கும்.