உங்கள் ராசிப்படி உங்களின் உண்மையான பலம் என்ன தெரியுமா?

astrology

மேஷம்
meshamமேஷ ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கை உடையவராக இருப்பார்கள். இவர்கள் சிறு வயதில் இருந்தே அனைத்திலும் தலைமை பொறுப்பை வகிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள். அத்தகைய பொறுப்பு இவர்களை பக்குவமடைய செய்வதோடு தைரியமுள்ளவர்களாகவும் மாற்றி இருக்கும். இவர்கள் வாழ்வில் சிறந்த முடிவுகளை எடுக்க தெரிந்தவர்கள். இவர்கள் எதிலும் முதல் ஆளாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதற்காக உழைக்கவும் செய்பவர்கள்.

ரிஷபம்
rishabamரிஷப ராசிக்காரர்கள் அனைத்தையும் பொறுமையோடு கையாளுபவர்கள். இவர்கள் சிறந்த நண்பராகவும் காதலராகவும் இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையை யதார்த்தத்துடன் பார்ப்பார்கள். அதோடு நடைமுறைக்கு ஏற்றபடி வாழ்பவர்கள். மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில் வல்லவர்களான இவர்கள், மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்கும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் நம்பகத்தன்மையுள்ளவராகவும், உறுதியுள்ளவராகவும், கடின உழைப்பாளியாகவும் இருப்பவர்கள்.

மிதுனம்
midhunamமிதுன ராசிக்காரர்கள் நல்ல பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கு எந்த வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்பதை நன்கு தெரிந்துவைத்திருப்பார்கள். தாங்கள் பெற்ற அறிவை அனைவரிடமும் பகிரும் எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாக இருக்கும் இவர்கள், வாழ்க்கையின் மீது ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.

கடகம்
kadagamகடக ராசிக்காரர்கள் எப்போதும் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்கள் விசுவாசமுள்ளவர்களாகவும், மற்றவர்கள் மேல் அக்கறையுள்ளவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களுக்காக இவர்கள் எதையும் செய்வார்கள். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை எப்பேற்ப்பட்டாவது முடிக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். எடுத்த காரியத்தில் இருந்து இவர்கள் பின்வாங்கமாட்டார்கள்.

சிம்மம்
simmamசிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் தலைமையை ஏற்கும் பண்புடையவர்கள். இவர்கள் தங்கள் நண்பர்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பதோடு தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு உதவவும் செய்வார்கள். மற்றவர்களை இவர்கள் சிறப்பாக ஊக்குவிப்பார்கள். லட்சியவாதியான இவர்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்வார்கள்.

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் ஒரு விஷத்தை எடுத்தால் அதன் ஆணி வேர் வரை செல்வார்கள். இதனால் இவர்கள் சொல்லும் தகவல்கள் எப்போதும் நம்பக தன்மையானதாக இருக்கும். அழகாய் பேசும் ஆற்றல் உடையவர்கள் இவர்கள். அதனால், தான் வேலை பார்க்கும் இடங்களில் கலகலப்பாக இருப்பார்கள்.

- Advertisement -

துலாம்
thulamதுலாம் ராசிக்காரர்கள் எப்போதும் உயர்ந்த கொள்கைகளோடு இருப்பார்கள். தன்னிடம் எத்தனை பேர் பழகினாலும் அவர்கள் அனைவரின் குணத்தையும் சரியாக கணிப்பவர்கள் இவர்கள். நற்பண்புகளை கொண்ட இவர்கள் அனைவரிடத்திலும் எளிதாக பழகிவிடுவார்கள். இவர்கள் தங்கள் தொழிலில் நாணயத்தோடு நடந்துகொள்வார்கள்.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் உள்ளுணர்வை வைத்தே எதையும் எளிதாக புரிந்துகொள்வார்கள். எதையும் கூர்ந்து கவனிக்கும் தன்மை கொண்ட இவர்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இவர்கள் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல அனால் இடம் பிடித்துவிட்டால் இவர் எந்த உதவி வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் நல்ல நண்பராகவும் சிறந்த காதலராகவும் இருப்பார்கள்.

தனுசு
dhanusuதனுசு ராசிகாரர்கள் எதையும் அவ்வளவு எளிதில் விடாமல் போராடி பெரும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் எந்த வேலையையும் விரைவில் கற்றுக்கொள்வார்கள். அடுத்தவர்களின் மனதை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்வார்கள்.சவாலான செயல்களில் ஈடுபடுவதில் இவர்களுக்கு ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும்.

மகரம்
magaramமகர ராசிக்கார்கள் தாங்கள் எடுத்த காரியத்தில் வெற்றிபெறுவதற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைப்பவர்கள். தலைமை பண்புடைய இவர்கள் தோல்விகளை கண்டு அஞ்சமாட்டார்கள் அதே சமயம் துவண்டும் போகமாட்டார்கள். எந்த தொழில் செய்தாலும் கடுமையாக உழைத்து அதில் வெற்றியாளராக வருவார்கள். தான் மட்டும் அல்லாமல் தன்னை சுற்றி உள்ள அனைவரும் நலமோடும் மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள்.

கும்பம்
kumbamவாழ்க்கையை புத்திசாலித்தனமாக அணுகும் தன்மைகொண்ட இவர்கள் ஒரே சமயத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வார்கள். மற்றவர்களுக்கு இவர்கள் மீது நம்பக தன்மை இருக்கும். அதனால் இவர்கள் சொல்வதை மற்றவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். அடுத்தவர்களின் விடயத்தில் தலையிட விரும்பாத இவர்கள், மற்றவர்கள் தன் விஷயத்தில் தலையிடுவதையும் விருப்பமாட்டார்கள்.

மீனம்
meenamமீன ராசிக்காரர்கள் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் கற்பனையை உயர பறக்கவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு பலனும் உண்டு. அனைவரிடமும் சுலபமாக பழகும் தன்மை கொண்ட இவர்கள் இரக்ககுணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால், தன் நண்பர்கள் சோகமுற்றாள் இவர்களும் சோகமாக இருக்கும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.

இந்த ராசி பலன் அனைத்தும் பொதுவானவையே. உங்கள் நட்சத்திரம் மற்றும் லக்கினம் பொறுத்து இதில் சில மாறுதல்கள் இருக்கும்.