ஒருவர் சுகபோக வாழ்க்கையை பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் யோகம் இருந்தால் அவர்களது வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும் என்பர். அனால் எல்லோருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சம்பெற்றிருப்பதில்லை. அப்படி இருக்கையில் நாம் என்ன பரிகாரம் செய்தால் செல்வ செழிப்போடு வாழ சுக்கிரன் வழி செய்வார் என்று பார்ப்போம் வாருங்கள்.

sukran

பரிகாரங்கள் மூலம் சுக்கிரனின் அருட்பார்வை பட்டுவிட்டால், பட்டமரமும் துளிர்க்கும், பாலைவனம் சோலைவனம் ஆகும், அதிஷ்டம் கைகூடி வரும் என்பது ஆன்றோர் வாக்கு. சுக்கிரனுக்கு சிவ வழிபாடும், சிவனடியார் களைப் போற்றுவதும் மிகவும் பிடிக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்வது நல்ல பலன் தரும். பூஜையின்போது ஸ்ரீலட்சுமி துதி, மஹாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்ரம் போன்றவரை கூறிய பிறகு மகா லட்சுமியை வணங்குவதால் தீபத்தில் இருந்து வரும் சுடர் போல நமது வாழ்வில் வெளிச்சம் பெருகும். பூஜையின் போது வெண் பொங்கல், மொச்சை சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து தாமரை மலரகளால் மகாலட்சுமியை அரசிப்பதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம்.

mahaakshmi

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர யோகம் இல்லை என்பதற்காக பெரிதாக கவலைகொள்ள தேவை இல்லை. சுக்கிரனுக்கு மிகவும் உகந்த பூஜைகளான பஞ்சமி பூஜை, பௌர்ணமி பூஜை, சுவாசினி பூஜை, குமாரி பூஜை, பூச நட்சத்திரத்தன்று செய்யப்படும் புஷ்ய பூஜை போன்ற பூஜைகளில் தங்களால் எந்த பூஜை செய்ய முடியுமோ அதை செய்தாலே போதும் சுக்கிரனின் பரிபூரண அருளை பெறலாம்.

- Advertisement -

sukran

சுக்கிரன் மந்திரம்:

பார்கவாய வித்மஹி வித்யாதீசாய தீமஹி
தந்நோ: சுக்ர ப்ரசோதயாத்

சுக்கிரனுக்குரிய பூஜையை செய்யும் வேலையில் மேலே உள்ள சுக்கிர மந்திரதை ஜபிப்பதால் மேலும் பலன்களை பெறலாம்.