எந்த ராசிக்காரர்களுக்கு எதனால் பிரச்சனை அதிகம் தெரியுமா?

astrology

தினம் தோறும் நாம் படிக்கும் ராசி பலன் நமக்கு பல தகவல்களை தந்தாலும் நமது ராசிக்கான பொது பலன்களை அறிந்துவைத்திருப்பது சிறந்தது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உடலளவில் என்ன பிரச்சனைகள் வரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
Meshamமேஷ ராசிகர்களுக்கு அடிக்கடி தலைவலி, மூக்கடைப்பு ஆகியவை வர வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். இவர்கள் அத்திப்பழம், வாழைப்பழம், பீன்ஸ், ப்ராக்கோலி, ஆப்ரிக்காட் போன்றவற்றை உட்கொண்டு வந்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம்

Rishabamரிஷப ராசிகாரர்களுக்கு அடிக்கடி வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இவர்களுக்கு அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்படும். இதனை சரி செய்ய காய்கறி சாலட், பசலைக்கீரை போன்றவற்றை இவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம்
Midhunamமிதுன ராசிக்காரர்கள் அடிக்கடி எதையாவது நினைத்து கவலைப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஆகையால் இவர்கள் பாதாம், மோர், கிரேப் ஃபுரூட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதோடு தண்ணீரையும் அதிகம் குடிப்பது சிறந்தது.

கடகம்
kadagamகடக ராசிக்காரர்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்டாமல் வயிறு முட்ட சாப்பிடுவார்கள். இவள் பெரும்பாலும் கலோரிகள் அதிகம் இருக்கும் உணவை உண்ணுவார்கள். இவர்கள் உணவில் பச்சை காய்கறிகள், மீன் , பெர்ரிப் பழங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்
Simmamசிம்ம ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொள்வது, அவர்களை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ளும். அதிலும் சிம்ம ராசிக்காரர்கள் கடல் உணவுகள், எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

கன்னி
Kanniகன்னி ராசிக்காரர்களுக்கு ஜீரண கோளாறு அதிகம் இருக்கும் ஆகையால் இவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டால் அஜீரண பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.

துலாம்
Thulamதுலாம் ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஆல்கஹால் அருந்துவதையும் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த இரண்டு உணவுகளின் மீதுள்ள ஆசையால் அதிகம் உட்கொண்டு, அதனால் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

விருச்சகம்
Viruchigamவிருச்சிக ராசிக்காரர்கள் நோய்த்தொற்றுகளால் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் சற்று உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதால் எந்த நோய் வந்தாலும் சற்று கவலை கொள்வார்கள். அதனால் இவர்கள் பாதாம், அன்னாசி, வால்நட்ஸ், தயிர் போன்றவற்றில் சாப்பிட்டுவந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

தனுசு
Dhanusuதனுசு ராசிக்காரர்களின் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். குறிப்பாக இடுப்பிலும், தொடையிலும் தான் கொழுப்புக்கள் சேரும். எனவே இந்த ராசிக்காரர்கள் தானியங்கள், மீன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.

மகரம்
Magaramமகர ராசிக்காரர்களுக்கு எலும்பு சம்பதமான நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் அதனால் இவர்கள் தினமும் உணவில் பட்டாணி, உருளைக்கிழங்கு , முட்டைக்கோஸ், பால் போன்றவற்றை சேர்ப்பதால் எலும்பு சம்பதமான நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

கும்பம்
Kumbamகும்ப ராசிக்காரர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். இதனை தவிர்க்க பீச், பேரிக்காய், அத்திப் பழம், எலுமிச்சை, பேரிச்சம் பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

மீனம்
Meenamமீன ராசிக்காரர்கள் அடிக்கடி ஜலதோஷ பிரச்னையால் அவஸ்தை படுவார்கள். இவர்கள் அடிக்கடி பீட்ரூட், சிட்ரஸ், சிக்கன், மட்டன் போன்றவற்றை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.