துன்பங்கள் நீங்க உங்கள் ராசிப்படி இதை செய்தால் போதும்

astrology

ஜாதக ரீதியாக ஒவ்வொருவருக்கும் தனி தனி ராசி பலன் இருப்பது போல ஒவ்வொரு ராசிக்கும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. அதை முறையாக செய்தால் துன்பங்கள் விலகும். அந்த வகையில் மொத்தமுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் வெற்றிலையை வைத்து எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மேஷம்
Mesham

மேஷ ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழத்தை வைத்து செவ்வாய் கிழமைகளில் முருகனை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையும் மாம்பழத்தையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

ரிஷபம்
Rishabam

ரிஷப ராசிக்காரர்கள் வெற்றிலையில் சிறிது மிளகு வைத்து செவ்வாய் கிழமைகளில் ராகுவை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் மிளகையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

மிதுனம்
Midhunam

- Advertisement -

மிதுன ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழத்தை வைத்து புதன் கிழமைகளில் இஷ்ட தெய்வத்தை வணங்கிய பின் அந்த வெற்றிலையையும் வாழைப்பழத்தையும் உண்டால் துன்பங்கள் விலகும்.

கடகம்
kadagam

கடக ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாதுளம்பழத்தை வைத்து வெள்ளிக்கிழமைகளில் காளியை வணங்கி பின் அந்த வெற்றிலையையும் மாதுளை பழத்தையும் உண்டால் துன்பங்கள் தீரும்.

சிம்மம்
Simmam

சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமைகளில் இஷ்டதெய்வத்தினை வணங்கி பின் அந்த வெற்றிலையையும் வாழைப்பழத்தையும் உண்டால் துன்பங்கள் விலகும்.

கன்னி
Kanni

கன்னி ராசிக்காரர்கள் வெற்றிலையில் சிறிது மிளகு வைத்து வியாழக்கிழமைகளில் இஷ்டதெய்வத்தினை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் மிளகையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

துலாம்
Thulam

துலாம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் சிறிது கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமைகளில் இஷ்டதெய்வத்தினை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் கிராம்பையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

விருச்சிகம்
Viruchigam

விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றிலையில் பேரீச்சம்பழத்தை வைத்து செவ்வாய்கிழமைகளில் இஷ்டதெய்வத்தினை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் பேரீச்சம்பழத்தையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

தனுசு
Dhanusu

தனுசு ராசிக்காரர்கள் வெற்றிலையில் கல்கண்டு வைத்து வியாழக்கிழமைகளில் இஷ்டதெய்வத்தினை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் கற்கண்டையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

மகரம்
Magaram

மகர ராசிக்காரர்கள் வெற்றிலையில் அச்சு வெல்லத்தினை வைத்து சனிக்கிழமைகளில் காளியை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் அச்சு வெல்லத்தையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

கும்பம்
Kumbam

கும்ப ராசிக்காரர்கள் வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமைகளில் காளியை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் நெய்யையும் உண்டால் துன்பங்கள் அகலும்.

மீனம்
Meenam

மீன ராசிக்காரர்கள் வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுகிழமைகளில் இஷ்டதெய்வத்தினை வழிபட்ட பிறகு அந்த வெற்றிலையையும் சர்க்கரையையும் உண்டால் துன்பங்கள் அகலும்.