குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சை பழத்தை என்ன செய்ய வேண்டும்?

elumichai

நாம் குலதெய்வ கோயிலிற்கு சென்று பூஜை செய்த பின்பு அங்குள்ள பூசாரி நமக்கு ஒரு எலுமிச்சை பழத்தை தருவார். அதுபோல மற்ற கோவில்களிலும் சிலருக்கு அர்ச்சகர் எலுமிச்சை பழத்தை தருவார். நம் வீட்டில் செய்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சையை வைத்து பூஜை செய்வோம். இந்த எலுமிச்சை பழங்களை நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

lemon

கோவிலில் நமக்கு கிடைக்கும் எலுமிச்சையானது இறைவனின் பிரசாதமாக கருதப்படுகிறது. அதிலும் குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சைக்கு சக்தி அதிகம். பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வீட்டில் உள்ள அனைவரும் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் விலகி ஆரோக்யம் மேம்படும்.

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் நம் வீட்டில் செய்யும் பூஜைகளில் வைக்கும் எலுமிச்சையை அம்பிகையின் பிரசாதமாக எண்ணி அடுத்த நாள் காலையில் சாறு பிழிந்து அருந்துவது நல்லது.