சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக உப்பு வாங்கி வீட்டில் வைத்து விட்டால் மட்டும் போதுமா? உப்பை முதலில் என்னதான் செய்வது?

salt cash

மாதச் சம்பளம், வார சம்பளம் அல்லது ஏதோ ஒரு வகையில் வரும் பண வரவு இதில் முதல் தொகையை எடுத்து உப்பு வாங்க செலவு செய்ய வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த உப்பை வாங்கி அப்படியே வைத்துவிட்டால் நமக்கு எல்லா பலனும் கிடைத்து விடுமா என்று கேட்டால்! கிடைக்காது என்று கூறிவிட முடியாது. உப்பை வாங்கி அப்படியே நம் வீட்டின் உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வதில் இருக்கும் பலனை விட, அதிகமான பலனை அளிக்கக்கூடிய ஒரு வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வழிபாட்டினை நம் வீட்டில் செய்வதன் மூலம் அந்த மகாலட்சுமியின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்து, வீட்டில் லட்சுமி கலாட்சம் நிறைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மிகவும் சுலபமான, எளிமையான, நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய, இனிமையான வாழ்க்கையை தரக்கூடிய, அந்த பரிகாரம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ainthu-muga-vilakku

நீங்கள் எந்த கிழமையில் உப்பை வாங்கினாலும் சமையலறைக்கு கொண்டு செல்லாமல் உங்கள் வீட்டின் வேறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். வியாழக்கிழமை அன்று, உங்களது வீட்டு பூஜை அறையை எப்போதும்போல் சுத்தம் படித்துவிட்டு, வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக குத்துவிளக்கு தீபத்தை ஏற்றி வைத்து அதன் முன்பு ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முதல் சம்பளத்தில் வாங்கிய உப்பிலிருந்து ஒரு கைப்பிடி உப்பினை எடுத்து அந்த தாம்புல தட்டில் மீது கோபுரமாக வைத்துவிடவேண்டும். மனதார மகாலட்சுமியிடம் உங்களது சம்பள பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், உங்களது வீடு சுபிட்சமாக இருக்கவும் மனதார வேண்டிக் கொள்ளலாம்.

அடுத்ததாக சனிக்கிழமை இந்த வழிபாட்டினை தொடரவேண்டாம். ஞாயிறு, திங்கள் இந்த இரண்டு நாளும் இப்படி தொடர்ந்து செய்ய வேண்டும். மொத்தமாக(வெள்ளி, ஞாயிறு, திங்கள்) மூன்று நாட்கள் மகாலட்சுமியின் முன்பு கோபுரமாக கைப்பிடி அளவு உப்பை வைத்து உங்கள் குடும்பம் சுபிட்சமாக வேண்டிக்கொள்ள போகிறீர்கள். 3 நாட்களும் உப்பு மகாலட்சுமியின் முன்பு தாம்பூலத் தட்டில் அப்படியேதான் இருக்க வேண்டும்.

salt

திங்கட்கிழமை அன்று உங்களது பூஜையை நிறைவு செய்துவிட்டு, அந்த உப்பை எடுத்து உங்களது சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த உப்பிலிருந்து சிறிதளவு உப்பை எடுத்து சிகப்பு வண்ண பட்டுத் துணியில் கட்டி உங்கள் வீட்டில் பணப்பெட்டியில் வைத்தால் அதிர்ஷ்டம் நிச்சயம் உங்கள் வசம் இருக்கும் என்பது உண்மையான ஒன்று. மகாலட்சுமிக்கு உரியதான உப்பை, மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு வைத்து மனதார வேண்டிக் கொள்வதில் இருக்கும் மகிமையை, இந்த பரிகாரத்தை செய்து நீங்கள் உணர்ந்தால் மட்டுமே உங்களுக்குப் புரியும். நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம். மாதத்திற்கு ஒரு முறையாவது சமுத்திரத்தின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, கடல் நீரில் குளித்துவிட்டு இறைவழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே
தினம்தோறும் நம் வீட்டில் ஏற்றப்படும் விளக்கிற்கு இத்தனை சாஸ்திரங்கள் பார்க்கவேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Crystal salt palangal in Tamil. Crystal salt pariharam for mahalakshmi in Tamil. Crystal salt pariharam in Tamil. Crystal salt in Tamil.