தினம்தோறும் நம் வீட்டில் ஏற்றப்படும் விளக்கிற்கு இத்தனை சாஸ்திரங்கள் பார்க்கவேண்டுமா?

vilakku

நம் வீட்டில் தினம்தோறும் நாம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு விஷயம்தான் தீபம் ஏற்றுவது. தினமும் மாலை 6 மணி ஆகிவிட்டது. விளக்கு ஏற்ற வேண்டும். என்று சொல்லி தீப்பெட்டியால் விளக்கினை ஏற்றி வைத்தால் மட்டும் போதுமா? விளக்கு ஏற்றுவது என்பது நம்முடைய கடமையாக இருக்க கூடாது. ஆத்ம திருப்தியோடு இறைவனுக்காக செய்யப்படும் வழிபாடாக தான் இருக்கவேண்டும். நம்மில் சிலபேர் இதை கடமையாகத்தான் செய்து வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இந்த கால கட்டத்தில் நேரம், இன்மையும், அவசர வேலைகளுமே இதற்கு காரணம். சரி. இதற்காக என்ன செய்வது? பெரிய பெரிய வழிபாட்டு முறைகளை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றாலும், சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி தீபம் ஏற்றுவதன் மூலம் அதன் பயனை நம்மால் முழுமையாக அடைய முடியும். அது என்னென்ன வழிமுறைகள் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

kamatchi-vilakku

முதலில் நம் தீபத்தை ஏற்றும்போது ‘ஓம் ஒளிர் வளர் விளக்கே போற்றி’ என்ற மந்திரத்தை கூறி விட்ட பின்பு தான் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த மந்திரம் தீப தேவதைக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய மந்திரம். தீபத்தை குளிர வைக்கும் போது ‘ஓம் சாந்த சொரூபினியே நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லித்தான் குளிர வைக்க வேண்டும். முடிந்தவரை ஒரு பூவால் விளக்கை குளிர வைப்பது நல்ல பலனைத் தரும்.

அம்மனுக்கு பெரிய பூஜை செய்பவர்கள் எல்லாம், பெரிய காமாட்சி அம்மன் விளக்கு தீபத்தை ஏற்றி வைத்து, சிலம்பு அடித்து, உடுக்கை அடித்து, வரம் கேட்பார்கள். அந்த சமயம் அந்த தீபமானது அசைந்து, பூசாரிகளுக்கு பதில் சொல்லும். பலர் இதை பார்த்து இருப்போம். தீபத்தில் எரியும் சுடர் அவர்களுக்கு மட்டும் தான் பதில் சொல்லுமா. நாம் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் என்பது உங்களுக்கு தெரியுமா?

vilakku

அதாவது தினம் தோறும் பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு தீபத்தின் ஒளியில், பிரகாசிக்கும் மஞ்சள் நிறத்தையும், நீல நிறத்தையும் நன்றாக பார்த்து உணர்ந்து (மஞ்சள் நிறம்)சக்தியையும், (நீல நிறம்)சிவனையும் மனசார நினைத்து உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை அந்த தீப ஒளியிடம் கேட்டாலே போதும். உண்மையாக மனதார தீபத்தை ஏற்றி, கேள்வியை கேட்டு பாருங்கள். உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு நிச்சயம் அந்த தெய்வமானது பதில் சொல்லும். அதாவது இறைவனிடம் நல்ல காரியங்களுக்கு சம்மதம் கேட்பது போல், கேட்டுத்தான் பாருங்களேன்! நிச்சயமாக பலன் இருக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்!

- Advertisement -

அடுத்ததாக தீபத்தை ஏற்றிய பின்பு, தீபத்திற்கு நேர் எதிராக நின்று இறைவனை வழிபட கூடாது. தீபமானது கிழக்கு நோக்கி இருக்கும், நீங்கள் வடக்குப்பக்கம் பார்த்தவாறு நின்று இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும்.

praying-vilakku

பூஜை பாத்திரங்கள் விளக்கு இவைகளை சுத்தம் செய்வதற்கும் செயற்கையான பொடிகளை உபயோகப்படுத்த வேண்டாம். முடிந்தவரை சாம்பல், உமி, தவிடு, சீயக்காய் இப்படிப்பட்ட பொருட்களில் சுத்தம் செய்வது நல்லது.

தீபம் ஏற்ற இரட்டை திரி தான் பயன்படுத்த வேண்டும். இது எல்லோரும் அறிந்த ஒன்று தான். இரட்டை திரிகூட இரண்டும் சமமாக தான் இருக்க வேண்டும். ஒரு திரி ஏறியும் இறங்கியும் இருந்தால் அது தவறான ஒன்று.

deepam

பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் குளித்துமுடித்து விட்டு அவசர அவசரமாக ஈரஉடம்புடன், ஈரத்துணியுடன் தீபம் ஏற்றக்கூடாது. ஆண்கள் கட்டாயம் ஈரத் துண்டை கட்டிக்கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. பெரும்பாலான ஆண்கள் இந்த தவறை செய்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக ஐந்து நாட்கள் தீபம் ஏற்றக்கூடாது. முடிந்தால் 7 நாட்கள் வரை தீபம் ஏற்றாமல் இருப்பது நல்ல பலனைத் தரும்.

ஒரு சிலர் தீபம் ஏற்றும் நேரத்தினை மாற்றி மாற்றி ஏற்றுவார்கள். அதாவது மாலை வேலையில் 6 மணிக்கு தீபம் ஏற்றினால், தினம்தோறும் அதேசமயத்தில் தீபமேற்ற பழகிக்கொள்ளுங்கள். ஏனென்றால் முதல் நாள் நீங்கள் தீபம் ஏற்றிய சமயத்திலேயே, அடுத்த நாளும் தேவதைகள் நம் வீட்டிற்கு வருகை தருவார்கள். தீபமேற்றி அந்த நேரத்தில் அவர்களை அழைக்காவிட்டால், நம் வீட்டிற்குள் வராமல் சென்று விடுவார்கள் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மாலை 5.45 க்கு தினம் தோரம் ஏற்றினால், அதே சமயத்தை பின்பற்றிக் கொள்ள வேண்டாம். காலை நேரத்தில் தீபமேற்ற நாளும் இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டும்.

kamatchi vilakku

உங்கள் வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கில் முகம் தேய்ந்து இருந்தாலும், முகம் சரியாக தெரியவில்லை என்றாலும், தயவு செய்து அந்த விளக்கினை மாற்றிவிட்டு, புதிய விளக்கில் தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.

உங்கள் வீட்டில் சண்டை சச்சரவு இருக்கின்ற சமயத்திலோ அல்லது உங்கள் வீட்டின் அக்கம்பக்கத்தில் சண்டை சச்சரவு, சத்தம் இருக்கின்ற சமயத்திலோ விளக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது. இது எதற்காக என்றால், நம் வாயிலிருந்து வரப்படும் கெட்ட வார்த்தைகள், கெட்ட எண்ணங்கள் தோன்றும் அந்த சமயத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் பலித்துவிடும் என்று கூறுவார்கள். இது உண்மையும் கூட. கோபத்தில் நம் பேசும் பேச்சுக்கு ஆயிசு இல்லை. நிச்சயம் ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மியை இப்படித்தான் வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vilakku sastram in Tamil. vilaku. Veetil vilakku etrum murai. Vilakku deepam. Vilakku in tamil. Vilakku thiri in Tamil.