வாஸ்து ஆமை உங்களை என்ன செய்யும்? எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் காணலாம் தெரியுமா?

vastu-aamai3

வாஸ்து சாஸ்திரத்தில் சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை வெளிவிடும் ஆற்றல் உண்டு. சில பல வருடங்களுக்கு முன்பு வரை வாஸ்துவின் முக்கியத்துவம் இந்த அளவிற்கு இல்லாமல் இருந்தது. வாஸ்து நிபுணர்கள் ஆங்காங்கே முளைக்க துவங்கியதும் வாஸ்துவின் பயன்கள் மக்களுக்கு புரிய ஆரம்பித்தது. வாஸ்து படி கட்டபடாத வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருப்பது உண்மை தான். அவர்கள் பின்னாட்களில் வாஸ்து படி இங்கு இதை அமைத்திருக்கலாம் என்று புலம்பி கொண்டிருப்பார்கள். வீடு காட்டும் போதே வாஸ்து பார்த்து கட்டிவிட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரம் எல்லா வீடுகளும் பஞ்ச பூதங்களின் சக்திகளை உள்ளடக்கியுள்ளதாக கூறுகிறது. அதன் அடிப்படையில் அறைகளையும், அறையில் இருக்கும் பொருட்களையும் அமைத்து கொண்டால் சிறப்பான பலன் பெறலாம். வாஸ்து பொருட்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை அளிக்கும். வாஸ்து பொம்மைகளில் பல வடிவங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. அந்த வகையில் இந்த வாஸ்து ஆமை என்ன செய்யும் என்று இப்பதிவில் இனி காண்போம்.

இந்த வாஸ்து ஆமை பொம்மை செல்வத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. உறவுகளில் உருவாகும் சிக்கல்களையும் நீக்குமாம். இந்த ஆமை பார்ப்பதற்கு சீன பொம்மை போல தோன்றினாலும் இதன் தத்துவம் என்னவோ இந்து புராணங்களை கொண்டிருக்கிறது. விஷ்ணு பகவானின் இரண்டாம் அவதாரமான கூர்ம அவதாரம் ஆமையை குறிக்கிறது. ஆமை பல்லாயிரம் வருடங்கள் உயிர் வாழும் தன்மையை பெற்றிருப்பதால் இதற்கு நீண்ட ஆயுளை தரும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை அமிர்தம் எடுக்க மேரு மலையை கொண்டு கடையும் போது விஷ்ணு ஆமை உருவம் கொண்டு மலையை தாங்கி நின்று துணை செய்ததாக புராணம் குறிப்பிட்டுள்ளது.

koorma-avatharam

வாஸ்துவிற்கு திசைகள் அவசியமானது. இந்த வாஸ்து ஆமையை சரியான திசையில் வைக்காவிட்டால் பிரச்சனைகள் தோன்றும். எனவே எந்த திசைகளில் வைக்க வேண்டும்? எப்படி வைக்க வேண்டும்? எங்கு வைத்தால் என்ன மாதிரியான பலன்களை தரும்? என்று பார்ப்போம்.

- Advertisement -

வாஸ்து ஆமையை வீட்டின் நிலை வாசற்க்கதவில் பொருத்தி வைத்தால் குடும்ப உறுப்பினர்கள் இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படாது. கணவன் மனைவி இடையே அடிக்கடி நடக்கும் வாக்குவாதங்கள் குறையும். அன்பு பெருகும். வீட்டிற்குள் வரும் கெட்ட அதிர்வலைகளை தடுத்து நிறுத்தும்.

vastu-aamai

வாஸ்து ஆமையை கிழக்கு திசையில் வைப்பது பொதுவாக நல்ல பலன் தரும். ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். செல்வம் அதிகரிக்க, சம்பாதித்த செல்வம் நிலைத்து நிற்க இந்த வாஸ்து ஆமையை வடகிழக்கில் வைக்க வேண்டும். பித்தளை, கிரிஸ்டல், மண், இரும்பு போன்ற வெவ்வேறு உலோகங்களில் விற்பனைக்கு உள்ளதால் எதை வாங்குவது என்ற குழப்பம் இருக்கும். பித்தளை ஆமையை வாங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும். அனைத்திலும் வெற்றி காண முடியும். மண்ணால் செய்யபட்ட ஆமையை வாங்கி வைத்தால் தீராத வியாதிகள் மறையும்.

குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்கவும் குடும்ப ஆமை வாங்கி வைக்கலாம். அல்லது ஜோடியாக இரண்டு ஆமைகள் வாங்கி உங்களது படுக்கை அறையில் வைக்கலாம். குடும்ப ஆமை என்பது ஒரு ஆமையின் மேல் இரண்டு ஆமைகள் இருக்கும். தாயி, தந்தை, குழந்தை என்று பார்பதற்கே அழகாக வடிவமைக்க பட்டிருக்கும்.

vasthu aamai

வியாபாரம், தொழில் விருத்தி பெற அந்த இடங்களில் வெள்ளியால் ஆன வாஸ்து ஆமையை வாங்கி வைக்கலாம். உலோக ஆமையை வடக்கு திசையில் நீர் நிரம்பிய பாத்திரத்தில் ஆமையின் கால்கள் நனையும் படி வைக்க சகல செல்வங்களும் சேரும். வடக்கில் படுக்கையறை இருக்கும் பட்சத்தில் தண்ணீர் இல்லாமல் வெறும் ஆமையை மட்டும் வைக்கலாம். குழந்தை வாரம் வேண்டி காத்திருப்போர்கள் பிள்ளை ஆமையை வாங்கி வைக்கலாம். இதன் மூலம் இல்லத்தில் விரைவில் மழலை மொழி கேட்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
இந்த பொருளை உங்கள் படுக்கை அறையில் வைத்தால் வீட்டில் சண்டையே வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu shastra tortoise position in Home. Vastu tortoise in Tamil. Vastu tortoise direction. Vastu tortoise benefits. Aamai vastu in Tamil.