எந்த ராசிக்காரர்கள் மனதில் என்ன இருக்கும் தெரியுமா ?

astrology

ஜோதிட ரீதியாக ஒருவரது ராச்சிப்படி அவர்களது எண்ணம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். தினமும் நாம் படிக்கும் ராசி பலன் இதற்கு ஒரு உதாரணம். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கார்களின் மன நிலையும் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
Mesham
மேஷம் ராசிக்காரர்கள் எப்போதும் தான் இஷ்டபடிதான் அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதர்க்கு ஏற்றாற்போல் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தன்னைக்கு ஏற்றாற்போல் மாற்ற முனைப்போடு செயல்படுவார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும்.

ரிஷபம்:
Rishabam
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் சுயமாக சிந்திக்கக்கூடியவர்கள். அதோடு இவர்கள் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆகையால் இவர்களை நம்பி எதையும் செய்யலாம்.

மிதுனம்:
Midhunam

மிதுன ராசிக்காரர்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது. மற்றவர்கள் இவர்களை புரிந்துகொள்வது சற்று கடினமே.

கடகம்:
kadagam
கடக ராசிக்கார்கள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு கேரண்டி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் இவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்கள்.

- Advertisement -

சிம்மம்:
Simmam
சிம்மம் ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரின் பார்வையும் தன் மீது இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். இவர்கள் பெரிதாக எதையும் மனதில் வைத்துக்கொள்ளமாட்டார்கள். இவர்கள் தன்னை தானே நன்கு புரிந்துவைத்திருப்பார்கள்.

கன்னி:
Kanni

கன்னி ராசிக்காரர்கள் விவாதிப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். பாவம் பார்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை பேசி முடித்துவிடுவார்கள்.

துலாம்:
Thulam
துலாம் ராசிக்காரர்கள் பிறரை பற்றி சரியாக எடை போடுவார்கள். இவர்கள் எப்போதும் தங்களது மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அதோடு இவர்கள் கௌரவத்தை எதிர்பார்ப்பார்கள்.

விருச்சிகம்:
Viruchigam
விருச்சிக ராசிக்காரர்களின் மனநிலையை யாராலும் அறிய முடியாது. அவர்கள் சிரித்து பேசுவதால் எல்லாருக்கும் நட்பாகிவிடமாட்டார்கள். அவர்களின் குணத்தை வைத்து அவர்களை எடை போட முடியது. தனக்கு மிகவும் பிடித்தவர்களிடம் மட்டுமே மனம் விட்டு பேசுவார்கள்.

தனுசு:
Dhanusu
தனுசு ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு கொஞ்சம் அமைதியானவர்கள் போல் இருந்தாலும் அவர்களை சுற்றி உள்ளவராகளை தங்களின் எண்ணங்களோடு ஒத்துப்போக செய்து விடுவார்கள். இவர்களுக்கு மன வலிமை சற்று அதிகமாகவே இருக்கும்.

மகரம்:
Magaram
மகர ராசிக்காரர்கள் எப்போதும் தாங்கள் செய்யும் வேலையை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் கடினமாக உழைக்கும் தன்மை கொண்டவர்கள். நண்பர்களுக்கு எப்போதும் நல்லதை நினைப்பவர்கள்.

கும்பம்:
Kumbam
கும்ப ராசிக்காரர்கள் பயணத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். அதோடு எப்போதும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று மனதில் நினைப்பவர்கள் இவர்கள்.

மீனம்:
Meenam
மீன ராசிக்காரர்களின் மனதை அவர்களாலேயே அறிய முடியாது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மேல் அக்கறையாக இருப்பார்கள்.