கருட புராணம் கூறுவது என்ன?

Garudan
- Advertisement -
பொதுவாக மறுபிறவி குறித்த நம்பிக்கை சிலருக்கு உண்டு சிலருக்கு இல்லை. ஆனால் இந்து புராணங்கள் சிலவற்றில் மறுபிறவி குறித்த தகவல்களும், ஒருவர் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
Garudan
குறிப்பாக கருட புராணத்தை நாம் எடுத்துக்கொண்டால், அதில் பகவான் விஷ்ணு கருட பகவானிடம் இறப்பின் ரகசியங்கள் குறித்த ஏராளமான தகவல்களை கூறுவது போல உள்ளது. அதிலும் குறிப்பாக மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு என்ன தண்டனை என்பதும் அதில் கூறப்பட்டுள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம். அதில் பாவம் செய்பவர்களுக்கு குருடபுராணப்படி என்ன தண்டனையோ அதே தண்டனையை அந்த படத்தின் நாயகன் கொடுப்பார்.
Garudan
அந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் என்னமோ சில தான். ஆனால் கருடபுராணத்தில் மொத்தம் 28 தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தண்டனைகள் அனைத்தும் அவரவர் பாவத்திற்கு ஏற்றார் போல கொடுக்கப்படுமாம். பொதுவாக ஒரு வீட்டில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், அந்த நபர் இறந்த ஒரு வருடத்திற்குள் கருட புராணம் படித்தால் இறந்தவரின் ஆன்மாவிற்கு நல்லது நடக்கும் என்பது இந்துக்க்களின் நம்பிக்கையாக உள்ளது. மற்றபடி கருட புராணம் படிக்க நினைப்போர் கோவிலில் அதை படிக்கலாம்.
- Advertisement -