இன்னைக்கு நைட், கோதுமை அடை தோசையை இப்படி சுட்டு பாருங்க! 10 நிமிஷத்துல டின்னர் ரெடி!

gothumai-adai-dosai

கோதுமை தோசையை, நம் வீட்டில் எல்லோருமே செய்வோம். அந்த கோதுமை மாவை வைத்து, புதுவிதமாக, ருசியாக கோதுமை அடை தோசை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிகவும் சுலபமான முறையில், சுவையாக, அதுவும் சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு டிபன் தான் இது! நீங்க எங்கேயாவது வெளியே போயிட்டு வந்தீங்கன்னா கூட, சட்டுனு 10 நிமிடத்துல் இந்த தோசை சுட்டு, வீட்ல இருக்கிறவங்க எல்லோருக்கும் கொடுத்து விடலாம்.

gothumai-dasai

Step 1:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு சீரகம் – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஒரு கொத்து, பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலையும் சேர்த்து தேங்காய் வாசம் வரும் வரை, வதக்கிக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

Step 2:
அடுத்ததாக ஒரு அகலமான பவுலின் 200 கிராம் அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவு ரவை சேர்த்துக் கொண்டு, தேவையான அளவு உப்பை சேர்த்து, 1 கப் காய்ச்சிய பால் சேர்த்து, அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

Gothumai

அடுத்ததாக, வதக்கி வைத்திருக்கும் தேங்காய் துருவல் வெங்காயம் சேர்த்த வதக்கலை இந்த மாவோடு சேர்த்து, கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, கேரட் துருவல் சேர்த்து, நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு தோசைக் கல்லில், அடை போல இந்த மாவை வார்க்க வேண்டும்.

- Advertisement -

Step 3:
அவ்வளவு தாங்க! அடுப்பை மட்டும் மிதமான தீயில் வைத்து, எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக வேகவைத்து எடுத்து பரிமாறினால் சுவையான கோதுமை மாவு அடை தோசை தயார்! உடனடியான தோசையை செய்து விட்டோம். உடனடியாக இதற்கு தொட்டுக்கொள்ள என்ன செய்வது? என்று தானே யோசிக்கிறீர்கள்! கவலைப்படாதீங்க அதுக்கும் உடனடிப் சட்னிய பார்த்து விடலாம்.

chutney1

ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க.  தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, வர மிளகாய் – 4, தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா தழை இதில் எது இருந்தாலும் சிறிதளவு போட்டுக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் பொடியாக நறுக்க வேண்டாம். ரஃபா கட் பண்ணி, மிக்ஸியில் போட்டு ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் கெட்டிப் பதத்தில் அரைத்து, தாளிப்புகூட வேண்டாம். அப்படியே தொட்டு சாப்பிடலாம். இட்லி, தோசை, அடை தோசை, சப்பாத்தி, பூரி, எதுக்கு வேண்டும் என்றாலும், சட்டென்று இந்த சட்னியை செய்து சாப்பிட்டு விடலாம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
டிசம்பரில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா? நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.