டிசம்பரில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா? நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

december1

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒவ்வொரு வித்தியாசமான குணங்களை கொண்டிருப்பார்கள். அவர்கள் பிறந்த மாதத்தின் அடிப்படையை வைத்து ஓரளவிற்கு துல்லியமாக அவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்பதை கணித்து கூற முடியும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? நீங்களோ அல்லது உங்களது நண்பர்கள் யாராக இருந்தாலும் டிசம்பரில் பிறந்திருந்தால் நிச்சயம் இப்படிப்பட்டவர்கள் ஆகத்தான் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய குணங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

DECEMBER

டிசம்பரில் பிறந்தவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். யாருக்கும் இவர்கள் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள். சிறுசிறு விஷயத்திலும் அதிகம் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் அன்புக்கு ஏங்க கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் மேல் அன்பு வைப்பவர்கள் பெரும்பாலும் இவர்களை பயன்படுத்த மட்டுமே பார்ப்பார்கள். எது சரி? எது தவறு? என்கிற முடிவை இவர்களால் தெள்ளத் தெளிவாக எடுக்க முடியாது. இது அவர்களின் பலவீனமாக இருக்கும்.

ரோஷமும், தன்மானமும் இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் என்னதான் திறமையாக உழைத்தாலும், உழைப்பிற்கேற்ற பயனை இவர்களால் எப்போதும் அனுபவிக்க முடியாது. சக மனிதனை மனிதனாகப் பார்க்க தெரிந்தவர்கள் இவர்கள். இவர்களுக்கு மனிதநேயம் என்பதன் அர்த்தம் நன்றாகவே தெரிந்திருக்கும். வீம்புக்காக நீங்கள் செய்யும் செயல்கள் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.

december

இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் சமமானவர்கள் என்கிற கருத்தில் பற்றுள்ளவர்கள். இவர்களின் உடல் அமைப்பு நடுத்தரமான உயரத்தை கொண்டவர்களாகவும், வட்ட வடிவமான முகமும், சற்று பருமனான உடலமைப்பும், ஆழ்ந்த கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்களின் கண்களும், உதடுகளும் அழகாக இருக்கும். பற்கள் சீராக இருக்கும். நோய்கள் அதிகம் இவர்களை தாக்குவதில்லை. இவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் உடனே விலகி விடும். பெரும்பாலும் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், படபடப்பு, டென்ஷன், மனசோர்வு, ரத்தசோகை, தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வரும். மாமிச உணவுகளையும், மசாலா பொருட்களையும் தவிர்த்தால் எந்த நோயும் இவர்களை அணுகாது.

- Advertisement -

இவர்களுக்கு பெரும்பாலும் இளமையிலேயே திருமணம் முடிந்திருக்கும். தன் துணையுடன் எப்போதும் விதண்டாவாதம் செய்தாலும் அன்பிலும், பண்பிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தாங்கள் காதலித்தவர்களை கைபிடிக்க சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும் தைரியம் இவர்களிடத்தில் அதிகம் இருக்கும். தூய்மையை புனிதமாகக் கருத கூடியவர்கள் இவர்கள். ராகு பகவானை வணங்கி, அவருக்குரிய மந்திரத்தை உச்சரித்து வந்தால் இவர்கள் வாழ்வில் இன்னல்கள் குறையும்.

rahu 1

ராகு பகவான் மந்திரம்:
அர்த்காயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராஹூரும் ப்ரணாம்யஹம்.

success

அனுபவம் உள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் என்பதை மட்டும் இவர்கள் உணர்ந்து விட்டால் வாழ்க்கையில் பாதி பிரச்சனையை சுலபமாக எதிர்கொண்டு விடுவார்கள். எதையும் உணர்ச்சிவசப் படமால் ஆழ்ந்து யோசித்து பின்னர் தீர்க்கமாக முடிவு எடுக்க வேண்டும். இதுவா? அதுவா? என்று குழம்பி கொண்டே இருக்க கூடாது. உங்களுக்கு யார் நம்பிக்கைக்கு உரியவர் என்று தோன்றுகிறதோ அவரிடம் ஒருமுறை ஆலோசித்தப்பின் முடிவெடுங்கள் சரியாக இருக்கும். சோர்வை நீக்கி சரியென பட்டதை சட்டென செய்துவிட்டு திரும்பி பார்க்காமல் இருந்தால் உங்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
நாம் பேய், பிசாசு அல்லது அது போன்ற அமானுஷ்ய சக்திகளை நம் கனவில் காண நேர்ந்தால் என்ன பலன் தெரியுமா?

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.