புதுவிதமாக கோதுமை மாவில் அடை இப்படியும் செய்யலாம். இட்லி தோசை மாவு இல்லாத போது கட்டாயம் இதை நீங்க ட்ரை பண்ணி பாக்கணும்.

adai
- Advertisement -

புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு ரெசிபியை முயற்சி செய்தால் தவறு கிடையாது. வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து வித்தியாசமான முறையில் சுவையான ஒரு அடை எப்படி செய்வது என்றுதான் இன்றைய பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த அடையில் ஸ்பெஷலான ஒரு பொருளையும் சேர்க்கப் போகின்றோம். இதை சேர்த்து சமைத்துக் கொடுக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். புதுசா எதோ ஒன்றை சேர்த்து சமைத்துக் கொடுத்த திருப்தியும் நமக்கு கிடைக்கும்.

செய்முறை

முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப் அளவு போட்டுக் கொள்ளுங்கள். தேவையான அளவு – உப்பு, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 2 சிட்டிகை, சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய தேங்காய் பல் – 2 டேபிள் ஸ்பூன், இறுதியாக ஸ்பெஷல் ஐட்டம் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 1/2 கப், அளவு சேர்த்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து விட்டு இறுதியாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை பிசைய வேண்டும்.

- Advertisement -

அடை மாவு அளவுக்கு தளதளவென பிசைய கூடாது. சப்பாத்தி மாவு அளவுக்கு கட்டியாகவும் பிசைய கூடாது. சப்பாத்தி மாவை விட கொஞ்சம் தளதளவென லேசாக பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து அடை போல தட்டப் போகின்றோம்.

ஒரு வாழை இலை அல்லது பட்டர் ஷீட்டில் எண்ணெய் தடவி தேவையான அளவு மாவை உருண்டை பிடித்து, இந்த வாழை இலையில் வைத்து விரல்களை வைத்து தட்டலாம். ரொம்பவும் மொத்தமாக தட்ட வேண்டாம். ரொம்பவும் மெல்லிசாகவும் தட்ட வேண்டாம்.

- Advertisement -

அடை தோசை வார்ப்போம் அல்லவா அந்த அளவுக்கு தட்டிக் கொள்ளலாம். இல்லை என்றால் சப்பாத்தி உருட்டும் கட்டை இருக்கும் அல்லவா, அதில் லேசாக எண்ணெய் தடவி விட்டு இந்த மாவின் மேலே வைத்து உருட்டினால் கூட நமக்கு அழகாக அடை கிடைத்து விடும். (வாழை இலைக்கு மேலே எண்ணெய் தடவி இந்த மாவு உருண்டையை வைத்து சப்பாத்தியை கட்டையை வைத்து லேசாக உருட்டுங்கள்.)

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து வாழை இலையில் தட்டி வைத்திருக்கும் அடையை அப்படியே தோசை கல்லில் மேல் கவிழ்த்து, மேலே இருக்கும் வாழை இலையை எடுத்து விட்டால் சுலபமாக வந்துவிடும். ராகி அடை செய்வோம் அல்லவா. அதேபோலத்தான் இந்த அடையையும் நீங்கள் செய்யப் போறீங்க. மிதமான தீயில் இந்த அடையை தோசை கல்லில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நல்லெண்ணெய் வாத்து வேகவைத்து எடுத்துக் கொடுத்தால் சூப்பரான அடை தயார்.

இதையும் படிக்கலாமே: நாளைக்கு லஞ்சுக்கு வெண்டைக்காய் சாதம் இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க. இந்த டேஸ்ட்ல இதுவரைக்கும் வெண்டைக்காய் சாதம் யாருமே சாப்பிட்டிருக்க மாட்டீங்க.

தேவைப்பட்டால் நெய் வார்தும் இதை நீங்கள் சுட்டுக் கொள்ளலாம். மணக்க சுவையான இந்த அடைக்கு கார சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, எதை வைத்து வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். புதினா சட்னி வைத்தாலும் சுவையாக தான் இருக்கும். இப்படி ஒரு ரெசிபி மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -