இந்த 3 பொருட்களை சேர்த்து, 5 நாட்கள் உங்களுடைய முகத்தில் போட்டு பாருங்கள். எதனால் உங்களுடைய முகம் இவ்வளவு வெள்ளை ஆனது! என்று எல்லோரும் கட்டாயம் கேட்பார்கள்.

face13

நம்முடைய முகத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஒரு சுலபமான சூப்பரான வழியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய, சுலபமாக கிடைக்கக்கூடிய இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும். உங்களுடைய முகம் பளிச் பளிச்சென்று மாறும். ஐந்தே நாட்களில் அட்டகாசமான அழகு கிடைக்கவில்லை என்றாலும் கட்டாயம் உங்களுடைய நிறம் ஒரு ஷேட் மாறியிருக்கும். தவறாமல் ட்ரை பண்ணி பாருங்க.

potato

இந்த குறிப்புக்கு தேவையான பொருட்கள். உருளைக்கிழங்கு, தேன், கோதுமை மாவு அவ்வளவு தான். உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக கழுவி முதலில் துருவிக் கொள்ளவேண்டும். துருவிய உருளைக்கிழங்கை உங்களுடைய கைகளாலேயே பிழிந்து சாறு எடுக்க வேண்டும். மொத்தமாக 1/4 கப் சாறு கிடைத்தால் கூட போதும். அந்த சாறை பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்த உருளைக்கிழங்கு சாறு தெளியட்டும். தெளிந்த உருளைக்கிழங்கு சாறினை எடுத்து மற்றொரு பாத்திரத்திற்கு ஊற்றுங்கள். மொத்தமாக ஊற்றி விடாதீர்கள். தெளிந்த இந்த சாறின் அடியில் ஸ்டார்ச் அப்படியே வெள்ளையாக தங்கியிருக்கும். அந்த ஸ்டாச்சில் 1/2 ஸ்பூன் அளவு கோதுமை மாவும், 1/2 ஸ்பூன் அளவு தேனும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இது க்ரீமாக நமக்குக் கிடைக்க வேண்டும். (ஸ்டார்ச் என்பது அந்த உருளைக்கிழங்கு சாறு அடியில் வெள்ளையாக மாவு போல நிற்கும். இதைத்தான் ஸ்டார்ச் என்று சொல்வார்கள்.)

potato1

இந்த க்ரீம் உங்களுக்கு ரொம்பவும் கெட்டிப் பதத்தில் இருந்தால், கொஞ்சமாக உருளைக்கிழங்கு சாறை சேர்த்து க்ரீம் பக்குவத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுடைய முகத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது. முகத்தை நன்றாக கழுவி தண்ணீரை துடைத்துவிட்டு, அதன் பின்பு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடங்கள் உலர்ந்த பின்பு, குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டாலே போதும்.

ஐந்து நாட்கள் தொடர்ந்து காலை ஒரு முறை மாலை ஒரு முறை இதை செய்யலாம். இதை செய்து விட்டு கட்டாயம் வெயிலில் செல்லக்கூடாது. வெயிலில் சென்றால் உடனடியாக பலன் இருக்காது. இப்போது லாக் டவுன் சமயம் என்பதால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. இதை ஆண்களும் ட்ரை பண்ணலாம். பெண்களும் செய்யலாம். (தேன் சேர்க்காமல் வெறும் கோதுமை மாவை முகத்தில் போட்டால், சிலருக்கு சருமம் வறண்டு போவதற்கு வாய்ப்புகள் உண்டு.)

face1

ஐந்து நாட்கள் இப்படி செய்து முடித்துவிட்டு அதன் பின்பு இதைத் தொடர்ந்து செய்ய வேண்டாம். 15 நாட்களுக்கு ஒருமுறை இப்படி செய்யும்பட்சத்தில் உங்களுடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருந்திட்டுக்கள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும். கட்டாயமாக எதனால் உங்களுடைய முகம் வெள்ளையானது, என்று அடுத்தவர்கள் கேட்கும் அளவிற்கு ரிசல்ட் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க.