சமையலறையில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை, இப்படி பயன்படுத்தி வந்தால், நீங்கள் 7 நாட்களில் ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த அழகு தேவதையாக மாறி விடுவீர்கள்!

face5
- Advertisement -

பெண்கள் என்றாலே கருப்பாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும் அவர்கள் ஆகாயத்திலிருந்து இறங்கி வராத தேவதைகள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பெண்கள் தங்களுடைய அழகை தக்க வைத்துக்கொள்ள, இருக்கின்ற அழகினை மேலும் பொலிவு படுத்திக்கொள்ள அதிகப்படியான செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சுலபமாக தங்களை அழகாக பொலிவாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ration gothumai

முதல் குறிப்பாக உங்களது முகம் பொலிவடைய உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை மாவை எப்படி பயன்படுத்துவது? 1 சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு கோதுமை மாவைப் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய சருமம் வறண்ட சருமமாக இருந்தால், இந்த கோதுமை மாவோடு பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து கொள்ளலாம். உங்கள் சருமம் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமமாக இருந்தால் தண்ணீர் ஊற்றி இந்த கோதுமை மாவை பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்க எப்போதெல்லாம் வேலை இல்லாமல் உங்களுடைய வீட்டில் ஓய்வு எடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் இதைச் செய்யலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை செய்தால் கூட நல்ல ரிசல்ட் உடனடியாக கிடைக்கும். கோதுமை மாவில் தயார் செய்த பேஸ்ட்டை முகத்திற்கு மேல் பக்கமாக தடவி, இரண்டு நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். இது நன்றாக காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். முகம் பளபளப்பாக மாறும். குறிப்பாக கோதுமை மாவை வைத்து தான், வட மாநிலத்தில் உள்ள பெண்கள் தங்களுடைய அழகை மேலும் அழகுபடுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இரண்டாவது குறிப்பாக எல்லோர் வீட்டிலேயும் கட்டாயமாக வெள்ளை சாதம் இருக்கும். அதாவது வடித்த சாதம். அந்த வெள்ளை சாதத்தை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக காய்ச்சாத பாலை ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் ரொம்ப ரொம்ப மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். மொத்தமாக மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதும். அதன் பின்பு ஐந்து நிமிடங்கள் இது அப்படியே காயட்டும் அதன் பின்பு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவிவிட வேண்டும். இப்படி செய்தால் முகம் பளபளப்பாக மாறும்.

- Advertisement -

அடுத்தபடியாக கடலை மாவு, தேன், தயிர், எலுமிச்சை பழச்சாறு இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் மெதுவாக ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவினாலும் முகம் உடனடியாக பொலிவு பெறும்.

face3

நம்ம எல்லோரது வீட்டு சமையலறையில் தக்காளி இருக்கும். தக்காளி பழச்சாறுடன், அரிசி மாவு 1 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து முகத்தை 10 நிமிடங்கள் வரை இந்த பேஸ்ட்டை கொண்டு மசாஜ் செய்தால் முகம் உடனடி பொலிவு பெறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

face2

மேலே சொல்லப்பட்ட குறிப்புகளை எல்லாம் மொத்தமாக செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுடைய சருமத்திற்கு ஏது தோதாக இருக்குமோ, உங்களுக்கு எது சுலபமாக இருக்குமோ அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். எந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி வந்தாலும் உங்களுக்கு பக்க விளைவு ஏற்படும் என்ற பயமே வேண்டாம். வீட்டிலேயே இருந்தபடி முகத்தை அழகாக்கி கொள்ள, நீங்களும் தேவதையாக மாற இயற்கையான அழகு குறிப்புகள் இவை. உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -