டம்ளர் இட்லி செய்வதை விட இந்த கேக்கை செய்வது ரொம்ப ரொம்ப ஈசிங்க! கோதுமை மாவு இருக்கா வீட்ல, அது போதும். முட்டை கூட வேணாம்.

cake
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய கேக்கை, கோதுமை மாவில் ஆரோக்கியமாக செய்ய போகின்றோம். நம் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்தே. இந்த கேக்கை சுலபமாக செய்து விடலாம். முட்டை சேர்க்க தேவையில்லை. பேக்கிங் சோடா சேர்க்கத் தேவையில்லை. ஓவன் தேவையில்லை. எதுவுமே தேவையில்லையா? அப்போ இந்த கேக்கை எப்படி தாங்க செய்வது? தெரிந்து கொள்வோமா?

cake3

முதலில் இதற்கு தேவையான பொருட்களை சரியான அளவுகளில் பார்த்துவிடுவோம். கோதுமை மாவு – 1 கப், சர்க்கரை – 3/4 கப், திக்காக காய்ச்சி ஆற வைத்த பால் – 3/4 கப், ஏலக்காய் – 2, எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – 2 சிட்டிகை, சமையல் சோடா – 1/2 ஸ்பூன். (பேக்கிங் சோடா எல்லோர் வீட்டிலும் இருக்காது. சமையலுக்கு போடும் ஆப்பசோடா எல்லார் வீட்டிலும் இருக்கும் அல்லவா அதை சேர்த்துக் கொண்டாலே போதும்.) கோதுமை மாவை எந்த டம்ளரில் அளந்து இருக்கிறீர்களோ, அதே டம்ளரில் மற்ற பொருட்களை அளந்து எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். நல்லெண்ணை கடலை எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. வாசம் அடிக்காத ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சர்க்கரையையும் ஏலக்காயையும் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

cake1

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில் கோதுமை மாவு, அடுத்தபடியாக அரைத்து வைத்திருக்கும் சர்க்கரை, எண்ணெய், உப்பு, சமையல் சோடா இந்த பொருட்களை போட்டு முதலில் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு காய்ச்சி ஆறவைத்துள்ள பாலைச் இந்த மாவில் ஊற்றி கட்டி படாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் டம்ளர்களில் மீடியம் சைஸ் டம்ளர் மூன்று அல்லது நான்கு எடுத்துக்கொள்ளுங்கள். டம்ளருக்கு உள்ளே முதலில் எண்ணையை தடவி விட வேண்டும். அதன்பின் எண்ணெய் தடவிய டம்ளருக்கு உள்ளே லேசாக கோதுமை மாவை தூவி விட்டு, தயாராக கரைத்து வைத்திருக்கும் மாவை இந்த டம்ளரில் 1/2 டம்ளர் ஊற்றினால் போதும். இது அப்படியே இருக்கட்டும்.

cake2

குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக ஐந்து நிமிடங்கள் சூடு செய்து கொள்ளுங்கள். குக்கருக்கு உள்ளே ஒரு கலவடையை(ஸ்டேன்ட்) வைத்துவிடுங்கள். கலவடைக்கு மேலே ஒரு தட்டு. அந்த தட்டுக்கு மேலே கோதுமை கலவையை ஊற்றி தயாராக டம்ளர் வைத்து இருக்கின்றோம் அல்லவா, அதை அடுக்கி வைத்து விடுங்கள். குக்கரை மூடி போட வேண்டும். குக்கரில் கேஸ் கட் என்று சொல்லப்படும் ரப்பர் போடக்கூடாது. மேலே விசில் போடக்கூடாது. வெறுமனே மூடியை போட்டு அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து இந்த கேக்கை பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் வேக வைத்தால் போதும்.

cake4

கேக் சூப்பராக உப்பி வெந்து வந்துவிடும். ஒரு கத்தியை வைத்து டம்ளருக்ருக்குள் இருக்கும் கேக்கை குத்தி பார்த்தால், கத்தியில் கேக் ஒட்டாமல் வந்திருக்கவேண்டும். கேக் வெந்து விட்டது என்று அர்த்தம். கேக்கை குக்கரில் இருந்து வெளியே எடுத்து வைத்து நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

cake5

அதன்பின்பு கேக்கை பின்பக்கம் டம்ளரில் தட்டினாலே போதும் கேளுங்கள் கையோடு வந்துவிடும். பஞ்சு போல சூப்பர் கேக் தயார். டம்ளர் இட்லியை கத்தியை விட்டு கஷ்டப்பட்டு எடுப்பதுபோல கூட இந்த கேக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட இருக்காது. இவ்வளவு தானா என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு சூப்பர் ரெசிபி இது. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -