ராத்திரிக்கு என்ன டின்னர் செய்யறதுன்னு குழப்பமா இருக்கா? கோதுமை மாவு இருந்தா போதுமே! டக்குனு இந்த புதுவிதமான கோதுமை ஊத்தப்பம் தயார்.

dosai2
- Advertisement -

எல்லோர் வீட்டிலும் கோதுமை தோசை வார்ப்பது வழக்கம்தான். எப்போதும் போல கோதுமை தோசையா. அந்த கோதுமை தோசையை சாப்பிடவே போர் அடிக்குது, என்பவர்களுக்கு வித்தியாசமாக இப்படி ஒரு கோதுமை ஊத்தப்பம் ஊற்றி கொடுத்து பாருங்கள். இதனுடைய சுவை சாப்பிடுவதற்கு ரொம்பவும் அருமையாக இருக்கும். தோசை வெறும் மண்ணு போல இல்லாமல், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து வித்தியாசமாக செய்யப் போகின்றோம். இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள ஒரு கார சட்னி இருந்தால் போதும். சூப்பராக சாப்பிட்டு விடலாம். வாங்க அந்த அருமையான கோதுமை மாவு ஊத்தப்பம் செய்வது எப்படி என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

கோதுமை ஊத்தப்பத்திற்கு முதலில் ஒரு தாளிப்பை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், மிகப்பெரிய நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு நன்றாக வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 போட்டு, 2 சிட்டிகை உப்பு தூள் தூவி, நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தாளிப்பு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு – 1 கப் அளவு, போட்டு 1 1/2 கப் அளவு லேசாக புளித்த மோரை இதில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்க வேண்டும். பிறகு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். மாவு தோசை வார்க்கும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.

மாவுக்கு தேவையான அளவு – உப்பு, பொடியாக நறுக்கிய – கொத்தமல்லி தழை, கடாயில் தாளித்து வைத்திருக்கும் தாளிப்பை கொட்டி, நன்றாக கலந்து விட்டு, 1/2 ஸ்பூன் சர்க்கரை போட்டு, ஒருமுறை கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு அப்படியே ஓரமாக வைத்து விடுங்கள். (சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் தவிர்த்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

ஒரு மணி நேரம் கழித்து ஊத்தப்பம் வார்க்க வேண்டியதுதான். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, மிதமாக சூடான பின்பு, தயார் செய்து வைத்திருக்கும் மாவை கரண்டியில் எடுத்து கல்லில் வார்த்து லேசாக ஊத்தப்பம் வடிவில் மட்டும் தீட்டி விட வேண்டும். மெல்லிசாக தீட்ட முடியாது. சின்ன சின்னதாக அழகாக வார்த்துக் கொள்ளுங்கள். தோசையை சுற்றி எண்ணெயை விட்டு மிதமான தீயில் தோசையை வேக வைத்து, திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுத்து பரிமாற வேண்டியதுதான். சுடச்சுட இந்த ஊத்தப்பம் சாப்பிட்டால் அத்தனை ருசி இருக்கும்.

தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, காரச் சட்னி நல்ல சுவை தரும். அப்படி இல்லை என்றால் மிக்ஸி ஜாரில் – 5 வர மிளகாய், 10 – பூண்டு பல், தேவையான அளவு – உப்பு, சிறிய துண்டு புளி, போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இது ரொம்பவும் விழுது போல அறையாது. கொஞ்சம் கொரகொரப்பாக தான் அறையும். மிக்ஸி ஜாரில் அரைத்த இந்த சட்னியை வழித்து, சுடச்சுட நல்லெண்ணெயை இதன் மேலே ஊற்றி அப்படியே ஊறுகாய் போல இதை, இந்த ஊத்தப்பத்திற்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். ரொம்பவும் சாப்பிடக்கூடாது.

இதையும் படிக்கலாமே: இப்படி கூட இனிப்பு போண்டா செய்யலாமா? டீக்கடைகளில் விற்கும் அதே சுவையில் பக்குவம் மாறாமல் இனிப்பு போண்டா செய்வது எப்படி?

வயிற்றுக்கு ஆகாது. மிளகாய் சட்னி இது. இருப்பினும் கோதுமை ஊத்தப்பத்திற்கு இது எக்ஸ்சல்ட்டான சைட் டிஷ். ஊத்தப்பம் போல இல்லாமல், சாதாரணமாக கோதுமை மாவை கரைத்து தோசை வார்த்து சாப்பிட்டாலும், அதற்கு இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம். அருமையாக இருக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -