கொரானா பாதிப்பு நம்மை விட்டு எப்போது விலகும்? பல மாதத்திற்கு முன்பாகவே சிறுவன் கூறிய ஜோதிட தகவல்.

corona-prevention

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்களின் மனது, ‘கொரானா பாதிப்பிலிருந்து நாம் அனைவரும் எப்படி வெளிவர போகிறோம்’? என்றுதான் சிந்தித்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும், அரசாங்கமும் நமக்கு ஒரு பக்கம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாலும், தினம்தோறும் கொரானாவினால் ஏற்படும் பாதிப்புகளை, தொலைக்காட்சியில் வரும் செய்திகளின் மூலம் நாம் பார்க்கும்போது நமக்கு அச்சம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் ஜோதிட ரீதியாக நமக்கு ஒரு ஆறுதல் கிடைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பாகவே அபிக்யா என்ற சிறுவன் ஆன்மீகம் ரீதியாக கணித்து சொல்லப்பட்ட கணிப்புதான் அது. அந்த சிறுவன் தன்னுடைய பதிவில் என்ன சொல்லி இருக்கின்றார், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

corona

“இந்த உலகமானது 17-11-2019 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2020 வரை பேரழிவை சந்திக்கும். இதனால் உலக நாடுகள் அனைத்தும் பாதிப்படையும் என்றும், இதில் அதிகமாக பாதிக்கப் போவது சீன நாடு தான் என்றும், இதன் மூலம் உலகத்தில் இருக்கும் அனைத்து போக்குவரத்து துறைகளும் நஷ்டத்தை சந்திக்கும் என்றும், குறிப்பாக விமான போக்குவரத்து பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை அந்தச் சிறுவன் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பெரிய இழப்பு நேரிடும்’ என்று ஜோதிட ரீதியாக சொல்லப்பட்ட இந்த தகவலானது இன்று பளித்திருக்கின்றது. தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் பேரழிவை பற்றி பல மாதங்களுக்கு முன்பாகவே அந்த சிறுவனால் எப்படி சொல்லி இருக்க முடியும்? என்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மூளை குழம்பி தான் போகும். ஆன்மீக ரீதியாக, கிரக நிலையை வைத்து அவன் சொன்னது இந்த கொடுமையான கொரானைப் பற்றி தான் இருக்குமோ? எது எப்படியாக இருந்தாலும், இதில் நாம் எல்லோருக்கும் கிடைத்த மன ஆறுதல் என்னவென்றால், அந்த வீடியோவில் பிரச்சனையானது ஏப்ரல் 2020 இல் ஒரு முடிவுக்கு வரும் என்று சொல்லப்பட்டதுதான்.

corona-test

கொடிய பிரச்சனை வரும் என்று சொன்னது நடந்திருக்கிறது அல்லவா? அப்போது பிரச்சனையானது தீரும் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வார்த்தையையும் நாம் நம்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த மாத இறுதிக்குள் நமக்கு இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்று  நம்புவோம்! இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் பெரிய ஆறுதல்.

- Advertisement -

பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற எல்லோருடைய மனப்பான்மையும், நேர்மறை எண்ணமும் நம்முடைய பிரச்சனையை தீர்த்து வைக்கும். எப்படிப்பட்ட கொடிய சக்தியையும் அடித்து விரட்டும் சக்தியானது நம் மன உறுதிக்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். எப்பாடுபட்டது அனைவரும் சேர்ந்து இந்தக் கொரானாவை ஒழித்து விடலாம். கூட்டு பிரார்த்தனைக்கு அதிக பலம் உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Coronavirus1

இதோடு சேர்த்து அந்த வீடியோவில், அந்த சிறுவன், மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட சிறிதளவு இஞ்சி, துளசி இலைகள், இவைகளை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அடுப்பிலிருந்து இறக்கி, அந்த சுடு தண்ணீரில், ஆவி பிடித்தால் கெட்ட கிருமியானது அழிந்துவிடும் என்றும், சூரிய  ஒளியில் அதிக நேரம் இருப்பதால் நன்மை உண்டாகும் என்றும் அந்த பதிவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Overview:
Here we have Corona prevention. Corona virus in Tamil. Coronavirus astrology. When coronavirus will stop.