வேப்பமரம் வீட்டில் வளர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? வேப்பமரத்தை வேரோடு வெட்டும் முன் இதை செய்வது நல்லது.

- Advertisement -

வேப்ப மரத்தை தெய்வீக மரமாகவே இந்திய மக்கள் போற்றி வழிபடுகின்றனர். மருத்துவ குணங்களை தன்னுள் அதிகமாக தக்க வைத்து கொண்டிருக்கும் வேப்ப மரம் தனித்துவம் மிக்க ஒரு மரமாக தான் இருக்கிறது. வேப்பம் நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. முருங்கை, வாழை, தென்னை என்று அனைத்து மரங்களும் மருத்துவ குணம் கொண்டைவை தான். ஆனால் அதில் இருந்து வேப்பம் சற்றே வேறுபட்டவை. ஏனெனில் வேப்ப மரத்தில் இருக்கும் பட்டை, பூ, காய், பழம், இலை, கொளுந்து, வேர் என்று ஒவ்வொரு பகுதிக்குள்ளுமே மருத்துவ குணங்கள் ஏராளம் அடங்கி இருக்கிறது. அத்தகைய வேப்ப மரத்தை வீட்டில் வளர்க்கலாமா? வளர்த்தால் நல்லதா? கெட்டதா? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

neem-tree

வேப்ப மரத்தை நமது முன்னோர்கள் வீட்டின் முன் வாசல் பகுதியிலும், முருங்கை மரத்தை வீட்டின் பின்னால் இருக்கும் இடங்களிலும் வளர்த்து வந்தனர். இதற்கு காரணங்கள் உண்டு. வீட்டை நோக்கி காற்று மூலமாக வரும் கிருமிகளும், தீய ஆற்றல்களும் உள்ளே நுழைவதை தடுக்கும் சக்தி வேப்ப மரத்திற்கு உண்டு. இதனால் தான் வீட்டு முன் வாசலில் வேப்ப மரத்தை நட்டு வளர்த்து வந்தனர்.

- Advertisement -

வேப்ப மரத்தில் இருந்து வெளிவரும் காற்றை நாம் சுவாசிக்கும் போது நம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. நுரையீரல் சுத்தம் அடைகிறது. காலையில் எழுந்து வேப்ப மரத்தின் பசுமையை கண் குளிர பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் கண்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். கண் பிரச்சனைகள் குறையும்.

neem-tree1

வேப்ப மரத்தை வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டும். இன்றைய சூழலில் வேப்ப மரம் வளர்க்க தயங்குவதன் காரணம் ஒன்றே ஒன்று தான். வேப்ப மரத்தின் வேர் படர்ந்து சென்று வீட்டின் சுவற்றை பாதிக்கும். இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க நிறைய இடம் தேவைப்படும். இப்போது இருக்கும் இடப் பற்றாக்குறையால் இது சாத்தியம் இல்லை. எனினும் வேப்ப மரத்தின் பயனை அனைவரும் பெறுவது கட்டாயமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் வளர்க்க முடியாவிட்டாலும் உங்கள் பகுதியை சுற்றி இருக்கும் பூங்கா, விளையாட்டு திடல் போன்ற பொது இடங்களில் வளர்த்து பராமரித்து நீங்களும், உங்களால் பலரும் பயன் பெறலாம். மாலை வேளையில் வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து காற்று வாங்குவதால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தினமும் மாலை வேளையில் இது போன்று வேப்ப மர நிழலில் அமர்ந்து சுவாசம் செய்வது நல்ல பலன் தரும். மன இறுக்கம் தளர்ந்து மன அமைதி உண்டாக்கும்.

tree-cutting

தெய்வ சக்தியும், மருத்துவ சக்தியும் கொண்ட வேப்ப மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இந்த மரத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் ஏதோ காரணத்திற்காக வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உடனே வெட்டி விடாதீர்கள். உங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு வெட்ட வேண்டிய வேப்ப மரத்திற்கு பொங்கல் படையல் இட்டு முறையாக வழிபட்டு அதன் பின்னால் வெட்டுவது நல்லது. இதனால் தெய்வகுற்றத்தில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். வேப்ப மரத்தை வேரோடு வெட்டுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. உடல் நிலை பாதிப்புகள், உடலில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குல தெய்வ வழிபாடு செய்துவிட்டு முற்றிலும் அகற்றுவதால் இந்த பாதிப்புகள் நீங்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
மந்திரம், தியானத்தின் போது கொட்டாவி வருவது சரியா? தவறா? ஏன் கொட்டாவி வருகிறது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Neem tree benefits in Tamil. Vembu tree uses in Tamil. Veppamaram tree in Tamil. Veppamaram uses in Tamil. Neem tree payangal in Tamil.

- Advertisement -