முதல் முதலாக உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க நினைத்தால்! எந்த நாளில் துவங்குவது அதிர்ஷ்டம் தரும் தெரியுமா?

murugan

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளிடம் பிரியமான நெருக்கம் இருக்கும். இது எல்லோருக்குமே தனித்தனியான விருப்பமாக அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு முருகன் என்றாலே மிகவும் பிடித்தமான கடவுளாக இருக்கும். ஒரு சிலருக்கு பெருமாள் மீது அதீத பக்தி இருக்கும். அவரைப் பார்க்கும் பொழுதே மெய்சிலிர்த்து, உடலெல்லாம் வியர்த்து போய் விடும். அது போல ஒவ்வொரு கடவுளுக்கும், அவர்களுக்கான தனித்தன்மையான பக்தர்களும் இருப்பார்கள். அவ்வகையில் நீங்கள் யாருடைய பக்தர் என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள்.

muruga

அவருடைய சுலபமான மந்திரத்தை 108 முறை தினமும் தியான நிலையில் அமர்ந்து வழிபட்டாலே அதிர்ஷ்டம் உங்களைத் தேடி தானாகவே வரும். இதைத்தான் கூரையை பிய்த்துக் கொண்டு பண மழை கொட்டுகிறது என்றும், அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது என்றும் கூறுவார்கள். அந்த வகையில் நீங்கள் உச்சரிக்கும் இந்த மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் துவங்கி விடக்கூடாது. அதற்கென்று பிரத்தியேக நாட்கள் இருக்கின்றன. அந்த நாளில் சாதாரணமாக நீங்கள் துவங்கினால் போதும். ஏராளமான நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். அப்படியான நாட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர்கள், ‘ஓம் நமச்சிவாய’ அல்லது ‘சிவாய நம’ என்கிற சாதாரண மந்திரத்தை வேதமாக நினைத்து தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் போதும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். அது போல் விநாயகருடைய தீவிரமான பக்தர்கள், ‘ஓம் கணேசாய நமஹ’ அல்லது ‘ஓம் கம் கணபதியே நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் யோகம் பெறலாம்.

thorana-ganapathy1

அம்பாளுடைய பக்தர்கள், ‘ஓம் சக்தி’ என்கிற மந்திரத்தையும், முருகன் மீது பற்றுக் கொண்ட பக்தர்கள், ‘ஓம் சரவணபவ’ என்கிற மந்திரத்தை அல்லது ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். அது போல பெருமாள் மீது பக்தி கொண்டவர்கள், ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரித்தால் அதைவிட சிறந்த பரிகாரம் உங்களுக்கு எதுவுமே இல்லை. அனும பக்தர்கள், ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்கிற மந்திரத்தையும், ராம பக்தர்கள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்கிற வேதத்தையும் மூச்சாக நினைத்து தினமும் உச்சரிப்பதால் ஏராளமான நன்மைகள் பெறலாம்.

- Advertisement -

இப்படி உச்சரிக்கும் பொழுது முதன் முதலாக நீங்கள் துவங்கக் கூடிய அந்த நாள் கிரகண நாட்களாக இருக்கலாம். சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் பொழுது மந்திரத்தை உச்சரிக்க துவங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். கிரகண நாட்களில் பெரும்பாலும் இறை நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு இறைவனுடைய அருள் நேரடியாக கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் காலம் காலமாக அந்த நாட்களில் தொடர்ந்து எந்த வேலையும் செய்யாமல், இறைவனுடைய நாமத்தை மட்டுமே உச்சரித்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

surya-grahanam

அது போல் ஆனி மாதம் பிறக்கும் அந்த நாளில் தொடங்கலாம். ஆனி மாத பிறப்பு ஜபம் செய்ய சிறப்பான நாளாக குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் இஷ்ட தெய்வத்தின் உடைய மந்திரத்தை உச்சரிக்க துவங்கினால் எதிர்பாராத நல்ல மாற்றங்களும் சிறப்பான வெற்றியும் கிடைக்கும். தை மாதத்தில் வரும் வளர்பிறை அன்று புதிதாக மந்திரம் உச்சரிக்க நினைப்பவர்கள் உச்சரிக்க துவங்கலாம். இதனால் உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் அந்த புண்ணியத்தில் பங்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமையில் இந்தப் பாடலை மட்டும் பாடினால் மகாலட்சுமியே நேரில் வந்து பணத்தை அள்ளித் தருவாள் தெரியுமா?

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.