பூஜை அறையில் சுவாமிக்கு வைக்கும் பூவை எப்போது எடுக்கலாம்

puja-room

பொதுவாக நாம் அனைவரும் பூஜை அறையில் உள்ள தெய்வத்தின் படங்களுக்கு பூ வைத்து வழிபடுவோம். அப்படி வைக்கப்படும் பூக்களை நாம் இஷ்டப்பட்ட நேரத்தில் எடுக்கக்கூடாது. அதற்கென்று சில நேரம் காலம் இருக்கிறது.

காலையில் சுவாமிக்கு பூ வைத்து வழிபாடு செய்தால் அதை மாலையில் எடுக்கவேண்டும். மாலையில் வழிபாடு செய்தால் அடுத்த நாள் காலையில் எடுக்க வேண்டும்.

அதேபோல் விசேஷ நாட்களில் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதும் வழக்கம். அப்படி படைக்கப்படும் நெய்வேத்தியதை பூஜை முடிந்ததும் நாம் எடுத்து பருகலாம் அதில் எந்த தவறும் இல்லை.