உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு இருந்தால் ராஜயோகம் தெரியுமா?

astrology

“யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்’’ என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அந்த வகையில் உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எந்த கட்டத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

horoscope

குறிப்பு: உங்கள் ஜாதகத்தில் லக்கினம் இருக்கும் இடமே ஒன்றாம் இடம். மற்ற இடங்களை லக்கினத்தை வைத்தே கணக்கிடவேண்டும். உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.

லக்னத்தில் ராகு இருந்தால், ஜாதகர் தேகபலன் உடையவராகவும், பிடிவாத குணம் கொண்டவராகவும்,  வறட்டு வேதாந்தம் பேசுபவராகவும் இருப்பார்.

2-ம் இடத்தில் இருந்தால், முன்கோபம் கொண்டவர். சுடுசொல் சொல்பவராக இருப்பார். ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் இருக்கும். தனக்கு சரியெனப் படுவதை மட்டுமே செய்வார்.

 3 – ம் இடத்தில் இருந்தால், சகோதரி உடல் நலியும். அகால போஜனமும் ஏற்படும். சதா பிரயாணமும் செய்பவராக ஜாதகர் இருப்பார். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.

- Advertisement -

astrology-wheel

4 – ம் இடத்தில் இருந்தால், தாயாருக்கு  உடல் நலிவு ஏற்படும். அகால போஜனமும் சதா பிரயாணமும் செய்பவர். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.

5 – ம் இடத்தில் இருந்தால், புத்திரத் தடைகளும், தோஷமும் உண்டு.  பூர்வ புண்ணியத்தில் தடை இருக்கும்.

6 – ம் இடத்தில் இருந்தால், நல்லறமான இல்லறம், செல்வம் செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு.

astrology wheel

 7 – ம் இடத்தில் இருந்தால், திருமணத்தடை, கலப்பு மணம், வீண் பழிச்சொல் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு.

8 – ம் இடத்தில் இருந்தால், கடின மனம் கொண்டவராக இருப்பார். ஆயுள் விருத்தி உண்டு.

9 – ம் இடத்தில் இருந்தால், தந்தைக்கு நஷ்டம் ஏற்படும். பிதுர் சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். ஆனாலும், ஜாதகருக்கு பூமி, பொருள் சேர்க்கை உண்டு.

astrology

10 – ம் இடத்தில் இருந்தால், கோடீஸ்வரர். பெண்கள் மூலம் பொருள் சேரும். நவரத்தினங்கள் சேரும். யோகமான வாழ்வு ஏற்படும். வெளிநாடு செல்வார்.

11 – ம் இடத்தில் இருந்தால், பிதுர் தோஷம் உண்டு. ஜாதகருக்கு திடீர் தனவரவு உண்டு. அசையா சொத்துக்களான நிலத்தின் மூலம் யோகம் கிடைக்கும்.

12 – ம் இடத்தில் இருந்தால் தூக்கம் கெடும். சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதிகச் செலவுகள் செய்பவர். சர்ப்ப தோஷமும் உண்டு.

astro vinayagar

கேந்திரஸ்தானங்களான 1, 4, 7, 10 -ம் இடங்களிலோ திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 -ம் இடங்களிலோ சுபக் கிரகங்களுடன் சேர்ந்தோ, சுபக்கிரகங்களால் பார்வையைப் பெற்று இருந்தாலோ, அவரது தசா புக்தி காலங்களில் திடீர் யோகம் ஏற்பட்டு ஜாதகர் பெரும் செல்வந்தராவார்.