எந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

virahaml

நம்மில் பலரும் தெய்வத்தின் அனுகிரகம் பெறுவதற்காக பல முக்கிய நாட்களில் விரதமிருப்பது வழக்கம். அந்த வகையில் எந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

பிரதோஷம் விரதம் :
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதி வரும் நாள் தான் பிரதோஷம் ஆகும். பிரதோஷ விரதத்திற்குரிய தெய்வம் நந்திதேவர் மற்றும் சிவபெருமான்.

lingam

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்க சில முறைகள் உள்ளன. அவை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.

பிரதோஷ விரதத்தை கடைபிடிப்பதால் கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். பாவங்கள் நீங்கும்.

கிருத்திகை விரதம் :
கிருத்திகை விரதம் சுப்ரமணியருக்கு உரியது. இந்த விரதத்தை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

- Advertisement -

lord muruga

விரதத்தின்போது பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்து, இரவில் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும்.
கிருத்திகை விரதம் இருப்பதால் பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும்.

தை அமாவாசை விரதம் :
தை அமாவாசை விரதம் சிவபெருமானின் அருளைப் பெற கடைப்பிடிக்கும் விரதமாகும். தை அமாவாசையன்று விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி ஏற்படும்.

பிற அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் தை அமாவாசையன்று விரதம் இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம் :
தமிழ் மாதமான ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் விரதம் இருந்து சுப்ரமணிய கடவுளை வணங்குவது கந்தசஷ்டி விரதம் ஆகும். முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட வேண்டும்.

Murugan

6வது நாளான கடைசி நாளன்று முழுநேரமும் சாப்பிடாமல் இருந்து சூரசம்ஹாரம் முடிந்தபிறகு, வாழைப்பழம், சிறிதளவு மிளகு இரண்டையும் சாப்பிட்ட பிறகு, மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கந்த சஷ்டி விரதம் இருப்பதால் குழந்தைப்பேறு விரைவில் கிடைக்கும் என்பது உறுதி.

தைப்பூச விரதம்:
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாளில் காலை ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருந்து சிவபெருமானை வணங்க வேண்டும்.

lingam

தைப்பூச விரதம் இருப்பதால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமண யோகம் உண்டாகும்.

சித்ரா_பவுர்ணமி_விரதம் :

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் வரும் நாளன்று சித்திரகுப்தரின் அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கும் விரதம் சித்ரா பவுர்ணமி விரதம்.

chithra guptan

சித்ரா பவுர்ணமி விரதத்தின்போது இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். மறுநாள் காலையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்ரா பவுர்ணமி விரதம் கடைப்பிடிப்பதால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை அடையலாம்.

சிவராத்திரி விரதம் :

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளன்று மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருந்து சிவனை வழிபட வேண்டும். சிவராத்திரி விரதத்தன்று இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

lingam

சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதால் முதுமைகாலத்தில் நிம்மதி கிடைக்கும்…