எந்த திசையில் என்ன செய்தால் பலன்களை அதிகமாக பெறலாம்

praying-god

ஒரு மனிதன் எந்த நேரத்தில் எந்த திசையில் என்ன செய்தால் அவனுக்கு பலன்கள் அதிகம் கிடைக்கும் என்று ஆன்மீக ரீதியாக சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

மங்களகரமான செயல்கள் எதை செய்தாலும் அதை கிழக்கு திசை நோக்கி செய்வது சிறந்தது. உதாரணத்திற்கு ஆசிர்வாதம் செய்பவர்கள் கிழக்கு நோக்கி செய்யலாம்.

இறைவனை நினைத்து தியானம் செய்பவர்கள் காலை நேரத்தில் கிழக்கு நோக்கியும் மற்ற நேரங்களில் வடக்கு திசை நோக்கியும் செய்வது நல்ல பலனை தரும்.

வடக்கு திசை நோக்கி சாப்பிடவும் தூங்கவும் கூடாது. கிழக்கு திசை நோக்கி தூங்குவது சிறந்தது.

மலஜலம் கழிக்கும் போது வடக்கு திசை நோக்கி கழிப்பது நல்லது.

கை, கால் கழுவும்போது மேற்கு திசை நோக்கி கழுவுவது நல்லது.

பள்ளி குழந்தைகள் கிழக்கு திசை நோக்கி படிப்பது நல்லது.