பூஜைக்கு எந்தெந்த மலர்களை பயன்படுத்துவது சிறந்தது.

pujai
- Advertisement -

நாம் வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பு இறைவனுக்கு மலர் சூடுவோம் அதன் பிறகு பூஜை செய்யும் போது இறைவனுக்கு மலர்களால் அச்சனை செய்வோம். இப்படி பூஜை நேரங்களில் நாம் பலவகையான மலர்களை பயன்படுத்துவது வழக்கம்.

அனால் எல்லா மலர்களை கொண்டும் இறைவனுக்கு பூஜை செய்யலாமா என்றால் நிச்சயம் கிடையாது. நாம் பூஜையில் பயன்படுத்தக்கூடிய மலர்கள் எப்படி இருக்கவேண்டும்? எந்தெந்த மலர்களை பயன்படுத்த கூடாது? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

பூஜைக்கு உபயோகப்படுத்தும் மலர்கள் அன்று பூத்த மலர்களாக இருக்க வேண்டும். தாமரை போன்ற நீரில் தோன்றும் மலர்களுக்கு இதில் விதி விலங்கு உண்டு. செடியில் பூத்து தரையில் விழுந்த மலர்கள் பூஜைக்கு உகந்ததல்ல. வாடிப்போனது, அழுகிப்போனது, பூச்சி கடித்தது இப்படியான மலர்களை நிச்சயம் உபயோக படுத்த கூடாது.  அதே போல் ஒரு முறை கடவுளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்யக்கூடாது. இதில் துளசி மற்றும் வில்வத்திற்கு விதி விளக்கு உண்டு.

விஷ்ணு மற்றும் அவருடைய அவதார ரூபங்கள் மற்றும் அவர் சார்ந்த தெய்வங்களுக்கு துளசியால் பூஜை செய்யலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு துளசியால் பூஜை செய்யக்கூடாது. அதே போல் சிவன் சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வது விஷேஷம். அதே சமயம் வெள்ளெருக்கு, தும்பை, கொன்றை, ஊமத்தை போன்றவற்றை கொண்டும் அர்ச்சனை செய்யலாம். துளசி, வில்வம், மருக்கொழுந்து, தாமரை, செண்பகம், மகிழம், நாயுருவி, அருகு, நெல்லி, விஷ்ணுக்ராந்தி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.

- Advertisement -

எந்தெந்த மலர்கள் அர்ச்சனைக்கு உகந்ததல்ல
சரஸ்வதி தேவிக்கு பவளமல்லி கொண்டு அரசனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
லட்சுமி தேவிக்கு தும்பை கொண்டு அரசனை கூடாது.
சிவபெருமானுக்கு தாழம்பூ அரசனை கூடவே கூடாது.
பெருமாளுக்கு அட்சதை கொண்டு அர்ச்சனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

துளுக்க சாமந்திப்பூ அர்ச்சனைக்கு ஏற்றதல்ல. அதே போல் மலரை இதழ் இதழாக அர்ச்சனை செய்யக்கூடாது. மலர்களின் மொட்டை கொண்டு பொதுவாக அர்ச்சனை செய்யக்கூடாது. இதில் செண்பக மொட்டுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு.

- Advertisement -