எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் பதிவு உயர்வு கிடைக்கும் தெரியுமா?

astrology

ஒருவருக்கு பதவி உயர்வும் அதனால் ஏற்படும் சம்பள உயர்வும் அவருடைய 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தின் வலிமையைப் பொறுத்தே அமைகிறது. பதவி உயர்வு தள்ளிப்போகும் நேரங்களில் அதற்கான ஜோதிட ரீதியான காரணத்தைத் தெரிந்துகொண்டு, தெய்வ வழிபாடு செய்வது அவசியமாகும். அந்தவகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் பதிவு உயர்வு பெறுவார்கள் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

astrology-wheel

மேஷம், விருச்சிக ராசி அன்பர்கள் மலை மேல் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலனைத்தரும். வைணவர்களென்றால் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

ரிஷபம், துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் அம்பாள் அருள்பாலிக்கும் அம்மன் கோயிலுக்கோ, பிரதோஷ நாளில் சிவன் கோயிலுக்கோ சென்று வழிபடலம். வைணவர்கள் லட்சுமி வழிபாட்டில் ஈடுபடலாம். குறிப்பாக, ஶ்ரீரங்கம் தாயார் சந்நிதி, கீழ் திருப்பதியிலிருக்கும் அலர்மேலுமங்காபுரம் சென்றுவழிபடலாம்.

Amman

மிதுனம், கன்னி ராசியினர் அருகிலிருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.

- Advertisement -

கடக ராசி அன்பர்கள் பார்வதிக்குத் தனிச் சந்நிதியுள்ள கோயில்கள், மாரியம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.

சிம்ம ராசியினர் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

lingam

தனுசு, மீன ராசியினர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம், கும்ப ராசி அன்பர்கள் விநாயகர், துர்கை, ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். திருப்பதிக்கு சென்று வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த ராசி பலன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம்.