2 ஏலக்காய்களை, இந்த இலையின் மேல் வைத்து விநாயகரை வழிபட்டால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும். நீண்டநாள் கஷ்டமும் நொடியில் தீரும்.

vinayagar

நம்முடைய வாழ்க்கையில் சில சமயத்தில் நாம் செய்யும் பரிகாரங்களாக இருந்தாலும், வேண்டுதல்களாக இருந்தாலும், அதற்கான பலன் உடனடியாக கிடையாது. ஆனால் நம்முடைய வேண்டுதலும் பரிகாரங்களும், என்றாவது ஒருநாள் எதிர்பாராத திருப்புமுனைகளை, எதிர்பாராத நேரத்தில் தந்து, நம்மை ஆச்சரியப்படுத்தும். அது தானே வாழ்க்கை! அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகும் இந்த பரிகாரம், நமக்கு உடனடி பலனை தரக்கூடியது. நீங்கள் மனதார இந்த வழிபாட்டை விநாயகப் பெருமானை நினைத்து தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் செய்து வந்தால், நிச்சயம் நீங்கள் எதிர்பாராத நன்மை ஒன்று உங்களை தேடி உடனே வரும்.

நீண்ட நாட்களாக உங்களுக்கு தீராமல் இருக்கக்கூடிய கஷ்டம் எதாவது ஒன்றை, நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். பல விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு வேண்டுதலை வைக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாரம் தோறும் வரும் திங்கட் கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தமாக குளித்து விட வேண்டும்.

பரிகாரத்திற்கு 2 ஏலக்காய், 1 வில்வ இலை, நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் அது உங்கள் சவுகரியத்தைப் பொருத்தது. வாசனையான தூபம் அல்லது ஊதுவத்தி கட்டாயம் இருக்க வேண்டும். விநாயகர் முன்பு வில்வ இலையை வைத்து விட்டு, அதன் மேல் 2 ஏலக்காய்களை வைத்து, உங்கள் கோரிக்கைகளை விநாயகப் பெருமானிடம் சொல்லி, அந்த பிரச்சனை கூடிய விரைவில் தீர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.

பணப்பிரச்சினைக்காக மட்டும் சொல்லக்கூடிய பரிகாரம் அல்ல இது. உங்களுக்கு வெளியில் சொல்ல முடியாமல் இருக்கும் எந்த பிரச்சனையை வேண்டுமென்றாலும், நீங்கள் விநாயகரிடம் சொல்லலாம். இரு கைகளை ஏந்தி, வேண்டி பூஜையை முடித்துவிட்டு, தீப ஆராதனையை காட்டை விட்டு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே விநாயகருக்கு முன்பு இருக்கும் அந்த இரண்டு ஏலக்காய்களை நீங்கள் சாப்பிட்டு விடவேண்டும்.

- Advertisement -

ஏலக்காய் வாசம் பிடிக்காதவர்கள் பேரிச்சம்பழத்தை வைக்கலாம். இருப்பினும் ஏலக்காய்க்கு தான் சக்தி அதிகம். அந்த வில்வ இலை வாடினாலும் பரவாயில்லை. இரண்டு மூன்று வாரங்களுக்கு அந்த இலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறு ஒன்றும் கிடையாது. சில இடங்களில் வில்வம் கிடைக்கும். சில இடங்களில் வில்வம் கிடைக்காது அல்லவா? உங்களுக்கு வாரம்தோறும் புதியதாக இலைகள் கிடைத்தல் வைக்கலாம். அதில் தவறொன்றும் கிடையாது.

vilvam1

திங்கட்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்லது நடக்கும். குறிப்பாக வில்வ இலை, ஏலக்காய் வைத்து நாம் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல், உடனடியாக பலிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 11 வாரங்கள் வழிபாடு செய்துவிட்டு அதோடு விட்டுவிட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

arugampul-vinayagar

இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் அதிகப்படியான மனத்திருப்தி உங்களுக்கு கிடைத்தால், உங்கள் வேண்டுதல் நிறைவேறும் வரை, வேண்டுதல் நிறைவேறிய பின்பும்கூட, இந்த பூஜையை தாராளமாக செய்யலாம். தவறு கிடையாது. நம்பிக்கையோடு செய்து அனைவரும் பலனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.