வீட்டில் படுக்கை அரை எந்த திசையில் இருப்பது சிறந்தது தெரியுமா?

0
2977
bed room
- விளம்பரம் -

”உண்ணுவது எவ்வளவு அவசியமோ அந்த அளவு நல்லபடியாக உறங்குவதும் அவசியம். நல்ல உணவும், நல்ல ஓய்வும் இருந்துவிட்டால் போதும், நாம் செய்ய வேண்டிய வேலைகளை உற்சாகமாக செய்யமுடியும். நம்முடைய வேலைகளில் நமக்கு தெளிவான மனநிலை காணப்படும். அந்த வகையில் நம்முடைய படுகை அரை எந்த திசையில் இருப்பது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.

bed-room

 

Advertisement

தென்மேற்கு:

ஒன்றிற்கு மேற்பட்ட படுக்கை அரை உள்ள வீடுகளில் மாஸ்டர் பெட்ரூம் தென்மேற்கு பகுதியில் இருப்பதே சிறந்தது. அதே போல ஒரே படுக்கை அரை உள்ள வீடுகளிலும் தென்மேற்கு பகுதியில் படுக்கை அரை இருப்பதே சிறந்தது.

தென்கிழக்கு:

தென்கிழக்கு படுக்கை அறை உஷ்ண ரோகத்தை உண்டாக்கும்.

bed-room

வடமேற்கு:

வடமேற்கு படுக்கை அறை சலனத்தை உண்டாக்கும்.

வடகிழக்கு:

ஈசான்யப் படுக்கை அறை நமது இலக்கை நாம் அடையத் தடையாக இருப்பதுடன், வம்சவளர்ச்சிக்குத் தடை அல்லது குழந்தைகளால் நிம்மதியில்லாமையை உண்டாக்கும். குறைப்பிரசவம், மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் உண்டாவது, கருச்சிதைவு போன்றவை ஏற்படும்.

bed-room

படுக்கை அறையில் படுக்கும்போது, தெற்கே தலைவைத்து வடக்கே கால் நீட்டி தூங்குவது மிக நல்லது. நன்றாகத் தூக்கம் வரும். மேற்கே தலை வைத்தும் படுக்கலாம்.

கிழக்கே தலை வைத்து குழந்தைகளைப் படுக்க வைப்பது நன்மை தரும். அறிவு நன்றாக வளரும். சிந்தனைகள் சிறக்கும்.  வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால், மன உளைச்சலும், தூக்கமின்மையும், ஞாபகமறதியும் ஏற்படும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு.

ஆகா ஈசான்ய மூலையை தவிர மற்ற திசையில் படுக்கை அரை இருக்கலாம். ஆனால் வயதானவர்களும் குழந்தைகளும் தென்மேற்கு திசையில் உள்ள படுக்கை அறையில் உறங்குவதே சிறந்தது.

Advertisement