எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் சிறந்தது தெரியுமா ?

astrology

ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவருக்கு எந்த தொழில் சிறப்பாகவும் இருக்கும் என்பதை எண் கணித ஜோதிடம் மூலம் அறிய முடியும். அந்த வகையில் யாருக்கு எந்த தொழில் சிறந்தது என பார்ப்போம் வாருங்கள்.

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்:

oneசூரியனால் குறிக்கப்படும் எண் ஒன்று ஆகும். இவர்கள் எங்கு இருந்தாலும் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். இவர்கள் சொந்த தொழில் செய்தால் அதில் நிச்சயம் பெற்றி பெற்று பெரிய ஆளாக வர அதிக வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 1, 10, 19, 28
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், சிவபெருமான்

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறக்கிறவர்கள்:

two2 என்கிற எண் சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த எண்ணில் பிறந்தவர்களை பற்றி எப்போதும் பலர் பேசிக்கொண்டே இருப்பார்கள். புதிய புதிய படைப்புக்களை உருவாக்கும் திறன் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். நடிப்பு, ஓவியம், இசை, நாடகம் என கலை சார்ந்த தொழில்களை இவர்கள் செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 7, 16, 25
வழிபடவேண்டிய தெய்வம்: பாலசந்திர கணபதி, சிவபெருமான்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்:

threeஇந்த எண்ணுக்குரிய கோள் வியாழன். மூன்று என்ற எண் சக்தியை குறிக்கிறது. இந்த எண்ணில் பிறந்த பலருக்கு இயல்பாகவே தேசப்பற்று இருக்கும். வங்கி பணி, ஆசிரியர் போன்ற வேலைகளை இவர்கள் செய்தால் நல்ல வளர்ச்சி இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 3, 9, 12, 18, 21, 27, 30
வழிபடவேண்டிய தெய்வம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தி

4,13,22,31 தேதிகளில் பிறப்பவர்கள்:

fourஇந்த எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் சற்று தனித்துவத்தோடு இருப்பார்கள். மற்றவர்களோடு இவர்கள் வாதம் செய்தால் இவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். வழக்கறிஞ்சர், மருத்துவ துறை, பங்கு சந்தை வர்த்தகம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் இருந்தால் வெற்றியும் வளர்ச்சியும் நிச்சயம் என்றே கூறலாம்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 1, 10, 19, 28
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

5,14,23 தேதிகளில் பிறப்பவர்கள்:

fiveஅனைவரையும் வசீகரிக்கும் தன்மை இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். இவர்களின் வாழ்வில் ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தாலும் போக போக இவர்கள் முன்னேறி சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைவது உறுதி. இவர்களில் பலர் தொழிலதிபர்களாக வளம் வர அதிக வாய்ப்புண்டு. விளையாட்டு, சேல்ஸ், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபட்டாலும் பிரகாசிப்பார்கள்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 5, 14, 23
வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்:

sixசுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கும் அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் திறமை இயல்பாகவே இருக்கும். யாரிடம் எப்படி பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பர். இவர்கள் எந்த துறையில் சென்றாலும் வெற்றி பெறுவார்கள் என்றாலும் கூட கலை துறை இவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றே கூறலாம்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 6, 15, 24
வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்:

sevenஇந்த எண்ணிற்குரிய கோள் கேது. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே தெய்வ பக்தி அதிகமாக இருக்கும். சேர்க்கை சரியில்லை என்றால் இவர்கள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு எப்போதும் எதையாவது புதிதாக கண்டிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். விஞ்ஞானம், ஆராய்ச்சி போன்ற துறையில் இவர்கள் ஈடுபட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 2, 11, 20, 29
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்:

eightஇந்த எண்ணிற்குரிய கோள் சனி. இந்த எண்ணில் பிறந்தவர்கள் எந்த அளவிற்கு உழைக்கிறார்களோ அதே அளவிற்கு இவர்களின் முன்னேற்றம் இருக்கும்.
சில நேரங்களில் உழைப்பிற்கான பலன் உடனே கிடைக்கவில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் கிடைக்கும். அரசாங்கத்தில் உயர் பதவி, நீதி துறை, ரியல் எஸ்டேட் போன்றவை இவர்களுக்கு பிரகாசமானவை.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 1,10,19,28
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

9, 18, 27ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்:

nineஇந்த எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாகவே எதையாவது சாதிக்க எண்ணுவார்கள். செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற இவர்களுக்கு மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை இருக்கும். கோவமும் நல்ல குணமும் இவர்களிடம் இருக்கும். காவல் துறை, ராணுவம், விளையாட்டு போன்ற துறைகள் இவர்களுக்கு உகந்தது.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 5, 14, 23, 9, 18, 6, 15, 24, 21, 30
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்