எந்த ராசிக்காரர்கள் யாரோடெல்லாம் இனைவது நல்லதல்ல தெரியுமா ?

astrology

ஜோதிட ரீதியாக சிலருக்கு சில ராசிக்காரர்கள் நன்கு ஒத்துப்போவார்கள் சிலர் ஒத்துப்போகவே மாட்டார்கள். அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் யாரோடு இனைவது நல்லதல்ல என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மேஷம்

meshamமேஷ ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. இவர்கள் இருவருக்கும் பல நேரங்களில் ஒரே விதமான எண்ணங்கள் தோன்றும். ஆனால் இவர்களுக்கு இடையே அக்கறையோ அல்லது புரிதலோ இருக்காது. ஆகையால் இவர்களின் உறவு நீண்ட நாட்கள் நீடிப்பது கடினம்.

ரிஷபம்
rishabamரிஷப ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. இந்த இரண்டு ராசிக்கார்களின் அடிப்படை குணமே வேறு வேறாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் அன்பிற்கு மதிப்பளிப்பார்கள் அதோடு இவர்களிடம் பொறுமையும் இருக்கும். ஆனால் கும்ப ராசிக்காரர்கள் பல திறமைகளை உள்ளடக்கியவர்கள். சாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் தங்களிடம் அன்பாக இருப்பவர்களை விட தங்களின் திறமைக்கு தூண்டுகோலாக இருபவர்களையே விரும்புவார்கள்.

மிதுனம்
midhunamமிதுன ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் அன்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். ஆனால் கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் பணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இதுவே இவர்களுக்கு இடையில் பிரச்சனையை அதிகரிக்கும்.

கடகம்
kadagamகடக ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. உறவுக்குள் மிக முக்கியமாக இருப்பது நம்பிக்கையே. ஆனால் இந்த இரண்டு ராசிக்கார்களுக்கும் இடையே நம்பக தன்மை குறைவாக இருக்கும். அதனால் இவர்களுக்குள் ஒத்துப்போவது கடினம்.

- Advertisement -

சிம்மம்
simmamசிம்ம ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. ஆரம்பகாலத்தில் இவர்களுக்குள் இருக்கும் உறவானது சிறப்பாக இருக்கும். ஆனால் போக போக சிம்மத்தின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கும். இதனால் இவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம்.

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. இதற்கான விளக்கத்தை சிம்ம ராசிக்கு கீழே காணலாம்.

துலாம்
thulamதுலாம் ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. பொதுவாக உறவுகளுக்கு இடையில் சிறு பிரச்சனைகள் வரும்போதே அதை தீர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இந்த இரு ராசிகாரர்களுக்கு இடையே பிரச்சனை சிறியதாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கான வழிகளை இவர்கள் கண்டறிய மாட்டார்கள். இதனால் சிறு பிரச்சனையும் பெரியதாக மாறும். ஆகையால் இந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இருந்தால் எப்போதும் பிரச்னையோடே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகம்
virichigamவிருச்சி ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. இந்த இரு ராசிக்கார்களுமே எப்போதும் மனம் விட்டு பேசுவது கிடையாது. இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது கடினம். யாரேனும் ஒருவர் மனம் விட்டு பேசினால் தானே அடுத்தவரும் பேச துவங்குவர். இவர்கள் இருவரும் அனைத்தையும் தங்கள் மனதிலே பூட்டி வைத்துக்கொள்வதால் பிரச்சனைகள் பெரியதாக வெடிக்க வாய்ப்புகள் அதிகம்.

தனுசு
dhanusuதனுசு ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. இந்த இரு ராசிக்கார்களும் தாங்கள் வாழ தேவைப்படும் அனைத்தையும் அடைவர். ஆனால் இருவ்ருக்கும் இடையேயான அன்பை அடையாமல் விட்டுவிடுவர். அன்பு குறைந்து போவதால் இவர்களின் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

மகரம்
magaramமகர ராசிக்காரர்கள் தனுசு ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. இதற்கான விளக்கத்தை தனுசு ராசிக்கு கீழே காணலாம்.

கும்பம்
kumbamகும்ப ராசிக்காரர்கள் ரிஷபம் மற்றும் கடக ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. இதற்கான விளக்கத்தை ரிஷபம் மற்றும் கடக ராசிக்கு கீழே காணலாம்.

மீனம்
meenamமீன ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்களோடு இனைவது அவ்வளவு நல்லதல்ல. ஆரம்ப காலத்தில் இவர்களுக்கு இடையேயான உறவு சிறப்பாக இருக்கும். ஆனால் போக போக கசக்க துவங்கும். இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு இடையே புரிதல் இன்மையே. சிம்ம ராசிக்காரர்கள் தான் நினைப்பதை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் மீன ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்களின் விருப்பதை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள். இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இது பொதுவான ராசி பலன் தான். அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் மாறுதல்கள் இருக்கலாம்.