எந்த ராசிகாரர்களுக்கு எதுபோன்ற வீடு அமைவது சிறந்தது தெரியுமா ?

astrology

பொதுவாக ஒருவருடைய ராசி அவருடைய வாழ்வில் பல விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த இடத்தில் வீடு வாங்குவது நல்லது அல்லது எந்த இடத்தில் அவர்களுக்கு வீடு அமையும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamமேஷ ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் தீயணைப்பு துறை அலுவலகமோ அல்லது மின்சாரத்துறை அலுவலகமோ அல்லது வேறு ஏதாவது அரசு அலுவலகமோ இருப்பது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே ஏதோ ஒரு அரசு அலுவலகத்திற்கு அருகில் வீடு அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறைந்த பட்சம் அது ஒரு ரேஷன் கடையாகக் கூட இருக்கலாம்.

ரிஷபம்:
rishabamரிஷப ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் அதிகமாக கூட்டம் கூடும் ஏதோ ஒரு கட்டிடம் இருப்பது சிறந்தது. அது திரையரங்காக இருக்கலாம், பள்ளிக்கூடமாக இருக்கலாம், கல்யாண மண்டபமாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு மைதானமாக இருக்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும்.

மிதுனம்:
midhunamமிதுன ராசி நண்பர்கள் பாறைகள் கலந்த மண் பகுதியிலோ அல்லது பழுப்பு நிற மண் பகுதியிலோ இடம் வாங்குவது சிறந்தது. அந்த மண்ணின் மேல் இவர்கள் வீடு கட்டி வாழ்ந்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்.

கடகம்
kadagamகடக ராசி நண்பர்கள் ஒரு வீட்டை கட்டவோ அல்லது வாங்கவோ செய்தால் அவர்கள் அந்த வீட்டின் வாசலை வடக்கு திசையில் வைப்பது சிறந்தது. அவர்களின் வீட்டருகில் எதாவது ஒரு அரசு அலுவலகமோ அல்லது மதம் சம்மந்தமான ஏதாவது ஒரு இடமோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம்:
simmamசிம்ம ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் ஏதாவது ஒரு பெரிய அதிகாரியின் அலுவலகமோ அல்லது வீடோ இருப்பது சிறந்தது. அது அரசியல்வாதியின் வீடாகவோ அலுவலகமாகவோ இருக்கலாம் அல்லது அரசு உயரதிகாரியின் வீடாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு அரசு அலுவலகமாக இருக்கலாம். அது ஒரு சிறிய ரேஷன் கடையாக கூட இருக்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும்.

- Advertisement -

கன்னி:
kanniகன்னி ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் எதாவது ஒரு பயிற்சி நிறுவனம் இருப்பது நல்லது. அது ஒரு பள்ளிக்கூடமாக இருக்கலாம், டுட்டோரியலாக இருக்கலாம், கல்லூரியாக இருக்கலாம் இல்லை வேறு ஏதாவது பயிற்சி நிறுவனமாக இருக்கலாம். கன்னி ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும்.

துலாம்:
thulamதுலாம் ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனம் இருப்பது சிறந்தது. அது ஒரு சிறிய பெட்டிக்கடையாக கூட இருக்கலாம். துலாம் ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும்.

விருச்சிகம்:
virichigamவிருச்சிக ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் வீர சாகசம் புரிபவர்கள் பலர் பணிபுரியும் அலுவலமாகமோ அல்லது வீடோ இருப்பது சிறந்தது. அது தீயணைப்பு துறை அலுவலகமாக இருக்கலாம், காவல் நிலையமாக இருக்கலாம் அல்லது ராணுவ குடியிருப்பாக இருக்கலாம். விருச்சி ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும். சிலருக்கு ஜமீன்தார் போன்ற செல்வந்தர்கள் வாழும் வீட்டருகில் இடமோ வீடு அமையும்.

தனுசு:
dhanusuதனுசு ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் பொதுவாகவே ஒருபக்கம் அதிக நல்லவர்களும் மறுபக்கம் தீயவர்களும் இருப்பார்கள். உதாரணத்திற்கு இந்த பக்கம் சுதந்திரபோராட்ட தியாகி வாழ்கிறார் என்றால் அந்த பக்கம் ஒரு திருடன் வாழ்வான். சாராயக்கடை போன்ற தீய பழக்கங்களை தூண்டும் கடைகளும் இவர்களின் வீட்டருகில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தனுசு ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும்.

மகரம்:
magaramமகர ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் கோவிலோ அல்லது சர்ச்சோ அல்லது மதம் சம்மந்தப்பட்ட ஏதாவது ஒன்று இருப்பது சிறந்தது. மகர ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும்.

கும்பம்:
kumbamகும்ப ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் ஏதாவது குடோனோ அல்லது தானிய கிடங்கோ அல்லது வாசனைகளை கூட்டும் பூக்கடையோ அல்லது மீன் கருவாடு போன்ற கடைகளோ இருப்பது சிறந்தது. கும்ப ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும்.

மீனம்:
meenamமீன ராசி நண்பர்கள் ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குகிறார்கள் என்றால் அதற்கு அருகில் எதாவது ஒரு பண்டிதரின் வீடோ அல்லது கோவில் பூசாரியின் வீடோ அல்லது ஆசிரியரின் வீடோ இருப்பது சிறந்தது. மீன ராசிக்காரர்கள் பலருக்கு இயல்பாகவே இதுபோன்று ஏதாவது ஒரு இடத்திற்கு அருகில் தான் வீடு அமையும். சிலரது வீட்டருகில் ஏதாவது ஒரு வழிபாட்டுத் தலங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது அனைத்து ராசிகளுக்குமான பொதுவான ராசி பலன் தான். அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.