நரை முடியால் வயதான தோற்றம் வந்து விட்டது என்று கவலைப்பட வேண்டாம். இந்த ஹேர் டையை உபயோகித்து பாருங்கள். உடனே இளமையாக மாறிவிடுவீர்கள்

hair1
- Advertisement -

நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் வயதாகியும் அவர்கள் இறக்கும் தருவாயில் வரும்பொழுதும் கூட அவர்களின் முடி அனைத்தும் பெரிதளவில் வெள்ளையாக மாறி இருக்காது. ஒரு சிலருக்கு கருமையாகவே இருக்கும். இப்பொழுது சிறு பிள்ளைகள் முதலிலேயே இளநரை வந்துவிடுகிறது. இருபது வயதை தாண்டியவுடன் பாதிக்கு மேல் முடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இது பலருக்கும் பெரும் கவலையை தருகிறது. இவ்வாறு நரைமுடி வரும் பொழுது நமது இளமை முடிந்து முதுமை வந்துவிட்டது என்ற எண்ணம் தோன்றி விடும். இதனால் நம்மை அழகு படுத்துவதில் கூட கவனம் செலுத்த முடியாது. எங்கு சென்றாலும் நம் தலையில் உள்ள வெள்ளை முடி மீது தான் நமது முழு கவனமும் இருக்கும். நம்மை பார்ப்பவர்கள் தலையிலுள்ள நரை முடியை வைத்து நம்மை வயதானவர்கள் என்று நினைத்துக் கொள்வார்களோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி கவலைப் படாமல் இருக்க இந்த ஹேர்டையை தவறாமல் பயன்படுத்தி பாருங்கள். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 1, சங்குப்பூ – 20, மருதாணி இலை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ள வேண்டும். அதில் 20 சங்கு பூவை சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைத்து, நன்றாக கொதிக்க விடவேண்டும். சங்கு பூவுடன் சேர்த்துள்ள ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளராக மாறும் அளவிற்கு இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பிறகு இந்த தண்ணீரை தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கைப்பிடி மருதாணி இலையை எடுத்துக்கொண்டு, அதனை நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாகிர் சேர்த்து அதனுடன் கால் டம்ளர் அல்லது 2 ஸ்பூன் சங்குப்பூ கொதிக்க வைத்த சாரை ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனையும் நன்றாக வடிகட்டி மருதாணிச் சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு வாழைக்காயின் மேல் உள்ள தோலை மட்டும் தனியாக சீவி எடுக்கவேண்டும். பின்னர் இதனை பொடியாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு சங்கு பூவின் சாறை சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி வாழைக்காய் தோலின் சாறையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு இரும்புக் கடாயில் மருதாணி சாறு வாழைக்காய் சாறு மற்றும் மீதமிருக்கும் சங்கு பூவின் சாறு அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை அடுப்பின் மீது வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இதில் கலந்துள்ள அனைத்தும் நன்றாக கொதித்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியாக மூன்று அல்லது நான்கு ஸ்பூன் அளவுக்கு வந்துவிடும். இதனை ஆற வைத்து, தலைக்கு குளித்து முடித்த பின், தலையில் உள்ள வெள்ளை முடிகளின் மீது நேரடியாக தடவி, பத்து நிமிடத்திற்கு அப்படியே உலர விட்டு, தலை சீவி கொள்ளலாம். மீண்டும் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடனே நரை முடி அனைத்தும் மறைந்துவிடும்.

- Advertisement -