சைவ ஹோட்டல்களில் செய்யும் இந்த வெள்ளை குருமா இவ்வளவு ருசியாக இருக்க சீக்ரெட் இது தானா? அந்த சீக்ரெட்டை நீங்களும் தெரிஞ்சிக்கிட்டு, உங்கள் வீட்டிலும் இந்த குருமாவை செய்து அசத்துங்க

- Advertisement -

இந்த வெஜ் வெள்ளை குருமா நாம் சாதாரணமாக செய்வது போல இல்லாமல், ஹோட்டல் ஸ்டைலில் அருமையாக செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். வீட்டில் சமைக்கும் இந்த குருமாவிற்கும் ஹோட்டல் குருமாவுக்கும் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இல்லை. சமைக்கும் முறை கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். அதில் சேர்க்கும் பொருட்களினால் தான் இதன் சுவை அத்தனை நன்றாக இருக்கிறது . இந்த முறையில் குருமா வைத்து பாருங்கள் ஹோட்டல் குருமா கூட தோற்று போய் விடும், அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, கேரட் – 1/4 கப், பீன்ஸ் – 1/4 கப், பச்சை பட்டாணி – 1/4 கப், உருளைக்கிழங்கு – 2, தேங்காய் துருவியது – 1/2 கப், முந்திரி -10, கசகசா – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், சக்கரை – 1 டீஸ்பூன், பால் – 1/4 கப்,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை , கிராம்பு ஏலக்காய் – சிறிதளவு தாளிக்க, கறிவேப்பிலை – 1 கொத்து.

- Advertisement -

முதலில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், பச்சை பட்டாணி இல்லையென்றால் காய்ந்த பட்டாணியை ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

குருமாவிற்கு மாலை அரைக்க, மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் சோம்பு, கசகசா, முந்திரி (முந்திரி இல்லை என்றால் பொட்டுக்கடலை சேர்த்து கொள்ளலாம்) பச்சை மிளகாய் இவைகளை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், ஸ்பூன் நெய் இரண்டையும் சேர்த்து பட்டை, இலவங்கம் ,ஏலக்காய், கல்பாசி போன்ற மசாலா பொருட்களுடன் கொஞ்சம் சோம்பு சேர்த்துக் பொரிய விடுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கியவுடன், சிறிது கருவேப்பிலை சேர்த்து பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பின் நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்க்கவும். பிறகு அரைத்த தேங்காய் மசாலாவை இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்து மேலே நுரைத்து வரும் போது சர்க்கரை, காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து கொஞ்சம் கொத்தமல்லி தழையும் மேலே தூவி கொள்ளுங்கள். (இதில் கடைசியாக சேர்க்கும் சர்க்கரையும் பாலும் தான் ஹோட்டல் சுவை குடுக்க கூடிய பொருள் எனவே இதை கட்டாயமாக சேர்த்து கொள்ளுங்கள்).

இவை அனைத்தையும் சேர்த்த பிறகு குக்கரையை மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விடுங்கள். அதன் பிறகு குக்கரை திறக்கும் போதே கம கம வென்று வாசனை உடன் வெஜ் வெள்ளை குருமா தயாராகி இருக்கும்.

- Advertisement -