எந்த தேதியில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்துகொள்வது நல்லது தெரியுமா ?

astrology

வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தாலே முதலில் வந்து நிற்பது ஜாதக பொருத்தம் தான். அதே போல ஒருவர் பிறந்த தேதியை கொண்டும் எந்த தேதியில் பிறந்தவர்கள் அவர்களுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதை கணிக்க முடியும். அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

1,10,19,28 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

one

ஒன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஒன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,4,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 1ம் எண்ணில் பிறந்த ஆண்கள் அதே எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

two

- Advertisement -

இரண்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் இரண்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,3,5,6,7 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 7 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2ம் எண்ணில் பிறந்த ஆண்கள் 8 அல்லது 9ம் எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

3,12,21,30 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

three

மூன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் மூன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 2,3,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது.

4,13,22,31 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

four

நான்காம் தேதியிலோ அல்லது கூட்டு என் நான்காக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

5,14,23 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

five

ஐந்தாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஐந்தாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,3,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

6,15,24 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

six

ஆறாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஆறாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 6ம் எண்ணில் பிறந்த ஆண்கள் 1,4,5,3 ஆகிய எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

7,16,25 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

seven

ஏழாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஏழாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,5,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 2 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 7ம் எண்ணில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

8,17,26 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

eight

எட்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் எட்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,4 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 8ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,7 ,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

9,18,27 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் :

nine

ஒன்பதாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஒன்பதாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,5,6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 3 அல்லது 6 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 9ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.