ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரியான சிக்கல்களை நமக்கு கொடுக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கென்றே அவ்வருடம் முழுவதும் நாம் போராட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் புதிதாக பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் ஒரு சில முக்கியமான ராசிகள் துரோகங்களையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. துரோகங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டிய 4 ராசிகள் யாரெல்லாம்? என்னும் ஜோதிடம் சார்ந்த ரகசியத்தை தான் இப்பதிவில் அறிந்து கொள்ள போகிறோம்.
ரிஷபம் :
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சமத்துவத்தையும், சமநிலையையும் பேணுவது நல்லது. உங்களுடைய இடத்தை தக்க வைக்க நீங்கள் சிறிது சிரமப்பட வேண்டி இருக்கும். உங்களை சுற்றி சூழ்ச்சிகளும், வஞ்சகங்களும் வலை போல் பின்னப்பட்டிருக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். தொழில் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளிடமிருந்து எச்சரிக்கை தேவை. வர்த்தக ரீதியாக துரோகங்களை சிலர் சந்திக்க கூடும். மனதிற்கு பிடித்தவர்கள் இடத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். கடமையிலும், கண்ணியத்திலும் கோட்டை விட்டுவிட்டால், பலவிதமான துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சிம்மம் :
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு தொழில் ரீதியான முக்கியமான மாற்றங்களை சந்திக்க போகிறீர்கள். வெற்றி வாய்ப்புகளை இழக்க கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும் எனவே கூடுதலாக விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தெளிவான திட்டமும், இலக்குகளை அடைவதற்கான உத்வேகமும் இருந்தால் மட்டுமே உங்களால் நினைத்ததை சாதிக்க முடியும். திரும்பும் இடமெல்லாம் சறுக்கல்களை சந்திக்க கூடும் என்பதால் பலவிதமான துரோகங்களையும் எதிர்கொள்ள கூடிய ஆண்டாக இருக்கும். வேலை இழப்பு, பொருளாதார ரீதியான சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழி உடைந்தது போல எல்லாம் கை கூடி வரும் நேரத்தில் பிரச்சனைகளும் வரும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்கள் இந்த ஆண்டு தலைமை பொறுப்பை ஏற்கக் கூடிய இடத்தில் இருக்கிறீர்கள். முக்கிய முடிவுகளையும், புதிய புதிய திட்டங்களையும் தீட்டப் போகிறீர்கள். ஆனால் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக மாறக்கூடும் எனவே எச்சரிக்கை தேவை. எதிர்பாராத தடைகளும், தடங்கல்களும் நிகழும் என்பதால் அலட்சியமாக இருக்காதீர்கள்.
உடன் இருப்பவர்களால் துரோகங்களையும், வஞ்சக சூழ்ச்சிகளையும் எதிர்கொள்ள கூடும் ஆண்டாக இருப்பதால் எவரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். அமைதியும், நிதானமும் தான் உங்களை மென்மேலும் உயர்த்தும் எனவே அவசரப்படாமல் இருப்பது நல்லது. எதிர்ப்பாலினத்தால் அவமானப்படுவதற்குரிய சந்தர்ப்பங்களும் உருவாகும். புதிய உறவுகள் இடத்திலும், அறிமுகம் இல்லாத நபர்களிடத்திலும் விழிப்புணர்வு தேவை.
இதையும் படிக்கலாமே:
மார்கழி வளர்பிறை சஷ்டியில் முருகன் வழிபாடு
துலாம் :
துலாம் ராசியில் பிறந்தவர்கள் புரட்சிகரமான சில விஷயங்களை செய்யக்கூடிய ஆண்டாக இருக்கப் போகிறது. முக்கியமான சவால்களை எதிர்கொண்டு முன்னேற போகிறீர்கள். உங்களுடைய பிடிவாதத்தால் பலருடைய அதிருப்திக்கு ஆளாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கடுமையான வாக்குவாதங்களால் பகைகளை சம்பாதிப்பீர்கள். அதிகப்படியான வேலை பளு, தீயோரின் நட்பு, தவறான பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் சிக்கித் தவிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் இந்த விஷயத்தில் எல்லாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனம் சார்ந்த பிரச்சனைகள், வேதனைகளை சந்திக்க இருக்கிறீர்கள். ஏமாற்றங்களையும், துரோகங்களையும் அனுபவிக்க காத்திருக்கிறீர்கள் எனவே எவரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.