நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

poor-people
- Advertisement -

நம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை. இதை புரிந்துகொள்ள ராமாயணத்தில் நடந்த ஒரு நிகழ்வை பார்ப்போம்.

raman

இராவணன் சீதையை கடத்திச்சென்று அசோகவனத்தில் வைத்திருந்தார். சீதையை மீட்க ராமன் இராவணன் மீது போர் தொடுத்தார். அந்த போரின் இறுதியில் ராமன் ராவணனை வீழ்த்தினார். இந்த செய்தியை சீதையிடம் தெரிவிக்க அனுமன் அசோகவனத்திற்கு விரைந்து வந்தார். சீதையிடம் ராமனின் வெற்றியை பற்றி கூறியவுடன் அவள் மிகவும் ஆனந்தம் கொண்டார்.

- Advertisement -

இவளவு பெரிய சந்தோசமான செய்தியை கூறிய உனக்கு நான் ஏதேனும் வரம் தர எண்ணுகிறேன். என்ன வரம் வேண்டும் கேள் ஆஞ்சிநேயா என்றார் சீதை. எனக்கு ஒருவரமும் வேண்டாம் தாயே. ஆனால் எனக்கொரு ஆசை உண்டு அதை நிறைவேற்ற நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும் என்றார் அனுமன். என்ன ஆசை சொல் என்றார் சீதை.

hanuman

நீங்கள் இங்கு இருக்கையில் உங்களை பாடாய் படுத்திய இங்குள்ள அரக்கிகள் அனைவரையும் நான் இப்பொழுதே தீயில் இட்டு மடிய செய்ய விரும்புகிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும் என்றார். சீதையின் முகம் மாறியது. நீ நினைப்பது தவறு அனுமன். அவர்கள் என்னை துன்புறுத்தியது உண்மை தான் என்றாலும் அதற்கு காரணம் நான் தான். நான் செய்த சில கொடிய செயல்களின் பலனாக தான் அந்த துன்பங்களை நான் அனுபவித்தேன் என்றார். உண்மையை உணர்த்த அனுமன் மனம் மாறினார். ஆனால் நீங்கள் அப்படி என்ன கொடிய செயல்களை செய்தீர்கள் அன்னையே என்று அனுமன் வினவினார்.

- Advertisement -

hanuman

நான் இங்கு வருவதற்கு முன்பு, பொன்மானாய் வந்த மாய மானை பிடித்து வரக்கூறி என் கணவரை நான் அனுப்பினேன். அவர் நீண்ட நேரம் வராததாலும் லட்சுமணா லட்சுமணா என்று அபயக்குரல் எழுப்பியதாலும் நான் லட்சுமணனை விரைந்து சென்று அவரது அண்ணனை தேட சொன்னனே. ஆனால் அவரோ தன் அண்ணனிற்கு ஒன்று நேர்ந்திருக்காது, நான் உங்களுக்கு காவலாக இங்கே இருப்பது தான் முக்கியம் என்று கூறினார். ஆனால் நான் அவரை அப்போது கடுன்சொற்களால் திட்டி அவரை விரைந்து செல்ல சொன்னேன். தன் கண்ணிமைபோல அவர் எங்களை பாதுகாத்தார் ஆனால் நான் அவரை அன்று என் வார்த்தைகளால் வருத்தமடைய செய்தேன். அதன் காரணமாகவே அரக்கிகள் என்னை துன்புறுத்தினர் என்றார் சீதை.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரீராமர் சொன்ன பொய் – இராமாயணத்தில் நடந்த சம்பவம்.

ஆக மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களுக்கும் அவர்களே காரணமாகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் செய்யும் சில கொடிய செயல்களால் அவர்களுக்கு பாவம் வந்து சேருகிறது. அதன் அடிப்படையிலே அவர்களுக்கு துன்பம் நேருகிறது என்பதே உண்மை.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான குட்டி கதைகள் மற்றும் சிறு கதைகளுக்கு தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து உடனுக்குடன் படியுங்கள்.

- Advertisement -