இந்த பூவை இப்படி வைத்தால் கோடி ரூபாய் கிடைக்குமா? எப்படி?

முதலில் நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். சீக்கிரமாக பணக்காரர் ஆவது எப்படி? புதியதாக சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது நீங்கள் படித்தவர்களாக இருந்தால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு கைத்தொழில் ஏதாவது தெரிந்திருந்தால் அதை வைத்து, ஏதாவது முயற்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி பணத்தை சேர்க்கும் வித்தையை பிரயோக படுத்தலாம். இப்படி என்ன செய்தால் பணம் கிடைக்கும் என்று பலவகையான யோசனைகளை சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்னதான் சிந்தித்து, என்னதான் முயற்சி செய்து, என்ன தொழில் தொடங்கினாலும் அது தோல்வியில்தான் போய் முடிகின்றது. அதிர்ஷ்டத்தை கொண்டுவர என்ன செய்வது? என்று சிந்திப்பவர்களுக்கு இந்த பரிகாரம் உபயோகமாக இருக்கும். அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

money bag

பொதுவாகவே முதலில் விநாயகரை வழிபட்டு தான் எந்த ஒரு தொழிலையும் தொடங்க வேண்டும் என்று கூறுவார்கள். அதாவது புதியதாக ஏதாவது தொழிலை தொடங்குவதாக இருந்தால் வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு குங்குமப் பொட்டு, பூ வைத்து விநாயகரை மனதார நினைத்து ஒரு தொழில் தொடங்கினால் நிச்சயம் அது வெற்றியடையும் என்பது நம்முடைய நம்பிக்கை. விநாயகருக்கு அருகம்புல் பிடிக்கும். இதை நாம் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் விநாயகருக்கு பிடித்தமான மற்றொன்று எருக்கம் பூ. இதை ஏன் நாம் விநாயகருக்காக அடிக்கடி வாங்கிக் கொண்டு சென்று சாத்துவதில்லை. விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் தான் விநாயகருக்கு மிகவும் பிடித்த எருக்கம் பூவை அவருக்கு வாங்கி மாலை அணிவிக்கின்றோம். இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை.

ஆனால் விநாயகருக்கு தினம்தோறும் எருக்கம் பூ மாலை சாத்தி வழிபட்டால் நல்ல பலனை கொடுக்கும் என்பது உண்மையான ஒன்று. விநாயகருக்கு பிடித்தமான இந்த எருக்கம் பூவை வைத்து நாம் ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு ‘பணம் சம்பாதிப்பதில்’ ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகும் என்று ஒரு தாந்திரீக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

water

அதாவது ஒரு கண்ணாடி டம்ளரில் தூய்மையான தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் சுத்தமான மஞ்சளை நன்றாக கரைத்துக் கொள்ளவேண்டும். கண்ணாடி டம்ளரில் கரைத்து வைத்திருக்கும் மஞ்சள் தண்ணீரில், ஒரு கொத்து எருக்கம்பூவை எடுத்து போட்டு, நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ வைத்துவிட்டால், கண்ணுக்குத் தெரியாத தடைகள் கூட, கண்ணுக்குப் புலப்படாமலேயே போய்விடுமாம். எருக்கம் பூவினை மஞ்சள் தண்ணீரில் போடும்போது ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை ஐந்து முறை உச்சரித்து விட்டு பின்பு அந்த தண்ணீரில் பூவை போட்டு விடலாம்.

- Advertisement -

இந்த தண்ணீரையும், பூவையும் தினம்தோறும் புதியதாக மாற்றிவிட வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கணபதியின் அருளை முழுமையாக பெற்று விடலாம். நீங்கள் செய்யும் தொழில் நல்ல முன்னேற்றத்தை அடையும். நல்ல லாபம் கிடைக்கும். சீக்கிரமாகவே பணக்காரர் ஆகும் யோகம், நீங்கள் செய்யும் தொழிலில் இருந்து உங்களுக்கு கிடைக்க இவ்வளவு சுலபமான பரிகாரம் வேறு ஏதும் உண்டா? உங்களது தொழில் நஷ்டத்தை சந்திக்காமல் லாபத்தை மட்டுமே பார்த்து வந்தால், ‘கோடி ரூபாய் பணம்’ என்ன அதற்குமேல் கூட லாபத்தை நம்மால் சம்பாதிக்க விடமுடியும். அதுவும் கூடிய விரைவில்.

இதையும் படிக்கலாமே
மனதிற்குப் பிடித்த வேலை, குறிப்பாக அரசாங்க வேலை கிடைப்பதில் சிக்கலா? எப்படிப்பட்ட தடையையும் நீக்கும் பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Erukkam flower benefits. Erukkam flower Uses. Erukku leaf benefits in Tamil. Erukku leaves uses in Tamil. Erukkam poo benefits.