கல் உப்பை எதற்காக அந்த மஹாலக்ஷ்மிக்கு இணையாக கூறுகிறார்கள் என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா?

mahalakshmi

சமீபகாலமாக அதிகமான பணவரவிற்கு உப்பை வைத்து பல பரிகாரங்களை நாம் செய்து வருகின்றோம். உப்பை வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் வாங்கி வைத்து வருவதன் மூலம், மஹாலக்ஷ்மியின் அம்சம் நம் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு சாஸ்த்திரம். ஆனால் நம் முன்னோர்கள் எதற்காக இந்த உப்பை மஹாலக்ஷ்மிக்கு இணையாக குறிப்பிட்டுள்ளார்கள் என்ற உண்மை சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கான விடையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

Lakshmi

பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது பிறந்தவள் மஹாலக்ஷ்மி என்ற ஐதீகம் நம் சாஸ்திரத்தில் உண்டு. உப்பு கடலில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. கடல்நீரில் மஹாலக்ஷ்மி பிறந்ததால், அதிலிருந்து நாம் பெறப்படும் உப்பிலும் மஹாலக்ஷ்மியின் அம்சம் இருக்கிறது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் உப்பினை அந்த மஹாலக்ஷ்மிக்கு இணையாக கூறினார்கள்.

இயற்கையாகவே கடலில் இருந்து கிடைக்கப்படும் சோழி, முத்து, சிப்பி, சங்கு, சுண்ணாம்பு இவைகளுக்கெல்லாம்  எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தியானது அதிகம். ஏனென்றால் இந்தப் பொருட்கள் எல்லாம் கடல் தண்ணீரிலிருந்து எடுக்கப்படுகிறது. கடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல மகத்துவம் உண்டு என்பதும் உண்மை. இப்படி இருக்கும்போது அந்தத் கடல்தண்ணீரையே காயவைத்து எடுக்கப்படும் இந்த உப்பிற்கு சக்தி அதிகமாக தான் இருக்கும். இதனால் தான் உப்பிற்கு நம் முன்னோர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். சமுத்திர தண்ணீரில் குளித்தால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பதும் நம் ஐதிகமாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

salt

நம்முடைய வாழ்க்கைக்கு அவசியமானதாகவும் அத்தியாவசியமானதாகும் இருக்கும் இந்த உப்பினை நாம் அனாவசியமாக எந்த விதத்திலும் வீணாக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் அதை கண்ணாடி ஜாடியில் அல்லது பீங்கான் ஜாடியில் சேமிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் இவை இரண்டும் உடையக்கூடிய தன்மை உடையது. இதை நாம் எடுக்கும் போது மிகவும் கவனத்துடன் செயல்படுவோம். இதனால் உப்பு கீழே கொட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. உப்பினை ஜாடியில் போட்டு வைப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். நம் முன்னோர்கள் நமக்கு கூறியிருக்கும் ஒரு சிறிய விஷயத்திலும் பல வகையான அர்த்தத்தை உள்ளடக்கி தான் வைத்திருக்கிறார்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா.

- Advertisement -

lakshmi

நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி குடுவையில் சிறிதளவு கல் உப்பைக் கொட்டி வைத்து அதில் சில்லரை காசுகளை போட்டு சேமித்து வாருங்கள். மாதம் ஒருமுறை அதனை எடுத்து பெருமாள் கோவில்களில் உண்டியலிலோ அல்லது தர்ம காரியத்திற்கோ செலவு செய்யுங்கள். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உங்கள் குடும்பத்தில் நிறைந்து இருக்கும். இப்படி மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும். எந்த தடைகள் வந்தாலும் அதனை நம்மால் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை நம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையையும், நாம் செய்யும் பரிகாரமும் ஒன்றாக சேர்ந்தால் வெற்றி நிச்சயம். எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு முன்னேற்றம் வரவில்லை என்று கூறுவது தவறு.

இதையும் படிக்கலாமே
குன்றின் மணியைப் பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்.

English Overview:
Here we have Kal uppu pariharam in Tamil. Crystal salt pariharam for mahalakshmi in Tamil. Crystal salt pariharam in Tamil. Crystal salt palangal in Tamil.