இறைவன் ஏன் பக்தர்களுக்கு துன்பம் தருகிறார் – குட்டி கதை

murugan-1

ஒரு கப்பலில் சிலர் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலில் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் ஒருவனை தவிர மற்ற அனைவரும் இறந்துபோனார்கள். அந்த ஒருவன் சில நாட்கள் நீந்தி ஒரு தீவை வந்தடைந்தான்.

ship

ஆளே இல்லாத அந்த தீவில் இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னை அழைத்து செல்ல இந்த தீவிற்கு யாரையாவது அனுப்பிவைக்கும்படி இறைவனிடம் வேண்டினான். நாட்கள் கடந்தன ஆனால் அவனை தேடி யாரும் வரவில்லை. அந்த தீவில் இருந்த சிலவற்றை கொண்டு அவன் அங்கு ஒரு குடிசையை கட்டி அதில் தங்க ஆரமித்தான்.

உடைந்த கப்பலின் பாகங்கள் அவ்வப்போது கரை ஒதுங்க ஆரமித்தது அதோடு அவனது சில உடைமைகளும் கரை ஒதுங்கியது. அதை வைத்துக்கொண்டு அங்கு அவன் வாழ தொடங்கினான். ஆனால் இறைவனிடம் பிராத்திப்பதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. என் மனைவி பிள்ளைகளை பிரிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்னை எப்படியாவது அவர்களோடு சேர்த்துவிடு இறைவா என அவன் கெஞ்சினான்.

shivan

அவன் பிராத்தனையை இறைவன் செவி கொடுத்து கேட்டதாக தெரியவில்லை. ஒரு நாள் திடீரென அவன் கட்டிய குடிசை தீப்பற்றி எரிய ஆரமித்தது. அவனால் அதை தடுக்க முடியவில்லை. அவன் அத்தனை நாள் சேர்த்த அனைத்தும் தீயில் கருகியது. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் கதறினான். உன்னிடம் நான் என்ன கேட்டால் நீ எனக்கு என்ன தருகிறாய் இறைவா என அவன் இறைவனிடம் மன்றாடினான்.

- Advertisement -

அழுதுகொண்டே அன்றிரவை அவன் கழித்தான். அடுத்தநாள் காலையில் அவன் வாழும் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்துகொண்டிருந்தது. அதை பார்த்து அவன் மகிழ்ச்சியில் குதித்தான். கப்பலில் இருந்தவர்கள் அவனை வந்து அழைத்து சென்றனர். அப்போது அவன், நான் இங்கு இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்.

ship

இந்த பகுதில் ஏதோ தீப்பற்றி எரிந்து புகை மூட்டமாக இருந்தது. அதனால் இங்கு யாரேனும் உள்ளார்களா என்று பார்க்கவே வந்தோம் என்றார்கள். அவன் குடியசையை இறைவன் எறியச்செய்ததற்க்கு காரணம் இப்போது அவனுக்கு புரிந்தது.

இதையும் படிக்கலாமே:
கெட்ட சகுனம், கெட்ட கனவு போன்ற பாதிப்பில் இருந்து விடுபட உதவும் மந்திரம்

துன்பம் வரும் வேலையில் பெரும்பாலானோர் இறைவனை வஞ்சிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் நமக்கு இறைவன் துன்பத்தை தருகிறார் என்றால் அதை விட பன்மடங்கு இன்பத்தை அவர் விரைவில் தர போகிறார் என்பதே அர்த்தம்.

மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டௌன்லோட் செய்து பயன் பெறுங்கள்.