பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்?

Pambu Putru

இந்துக்கள் பாம்பை தெய்வமாக வழிபடுவது வழக்கம். இதனால் பாம்பு புற்றில் பால் ஊற்றுவது, முட்டை வைப்பது போன்ற வழக்கங்கள் பல நூறு ஆண்டுகளாக இருந்துவருகிறது. அனால் பாம்பு முட்டையையும் பாலையும் குடிக்காது என்று நவீன அறிவியல் கூறுகிறது. பின் நம் முன்னோர்கள் எதற்காக பாம்பு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? வாருங்கள் பார்ப்போம்.

ஆதி காலத்தில் மனிதர்களை விட பாம்புகள் அதிகம் இருந்தது. இது மனிதர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. அனால் பாம்பை தெய்வமாக வணங்கிய மனிதன் அதை கொல்ல வேண்டாம் என்று எண்ணினான் மாறாக அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்.

பொதுவாக புற்றில் இருக்கும் பெண் பாம்பு தன் உடலில் இருக்கும் ஒரு வகை வாசனை திரவத்தை அனுப்பும். அதை நுகர்ந்துகொண்டு ஆண்பாம்பானது பெண்பாம்பை தேடி வரும். ஆக பெண்பாம்பு வெளியிடும் வாசனை ஆண் பாம்பிடம் செல்லாதவாறு தடுத்துவிட்டாலே பாம்பின் இனப்பெருக்கத்தை பெருமளவில் குறைத்துவிடலாம்.

இதை அறிந்த ஆதி தமிழன் பாலையும் முட்டையையும் புற்றில் ஊற்ற தொடங்கினான். இதன் மூலம் முட்டையிலும் பாலிலும் இருந்து வரும் வாசனை பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தியது. பாம்பின் இனப்பெருக்கமும் குறைந்தது.