தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ?

ennai-kuliyal

தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பதே சிறந்ததே இதை கங்கா ஸ்நானம்’ என்பர். இந்த குளியலானது கங்கை நதியில் குளிப்பதற்கு சமமானது என்று கூறப்படுகிறது.

oil bath

அதிகாலையில் தான் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்தார் அதனாலேயே நாம் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. அதோடு இப்படி குளிப்பதன் மூலமாக நம்மிடம் இருக்கும் இருள் நீங்கி மெய்ஞானம் பிறக்கும் என்பது ஐதீகம்.

தீபாவளி நாள் அன்று மட்டும் அல்லாமல் பொதுவாகவே வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பொதுவாக நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். அது இல்லாத பட்சத்தில் தேங்காய் எண்ணெயோ அல்லது விளக்கெண்ணையோ தேய்த்து குளிக்கலாம்.

oil

ஆண், பெண் என இருபாலரும் தாங்கள் விரும்பிய நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதென்பது சிறந்ததாகாது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும் இந்த விதி பொருந்தாது.

oil

எண்ணெய் குளியலின் மூலம் நம் உடலில் உள்ள உஷ்ணம் குறையும் ,உடல் அசதிகள் நீங்கும் இப்படி மேலும் பல நன்மைகளை அடையலாம் . ஆகையால் வருடத்தில் மற்றநாட்களில் எண்ணெய் குளியலை தவிர்த்தவர்களும் தீபாவளி அன்று ஒருநாளாவது எண்ணெய் குளியல் போடுவதால் பல நன்மைகளை பெறலாம்.