அசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது தெரியுமா?

0
2620
gopuram

நாம் கோயிலுக்குச் செல்வது இறைவனை வணங்க தானே, அதற்கு நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் போதாதா? ஏன் அசைவ உணவை உண்டு விட்டு கோயிலிற்கு செல்லக்கூடாது என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்? இப்படி பல கேள்விகள் பலர் மனதில் எழுவதுண்டு. அதற்கான அறிவியல் பூர்வமான விடையை காண்போம் வாருங்கள்.

kovil

நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம்.

பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும்.

gopuram

பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது.

மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.

temple

பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிக்கலாமே:
தானாக உருவான ஏழுமலையானின் சிலை. திருப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்

ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது.