Wi vs Eng : ஒரே போட்டியில் 46 சிக்ஸர்கள் 807 ரன்கள் வாரி இறைக்கப்பட்ட சாதனைகள் – விவரம் உள்ளே

Holder
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது மே.இ தீவுகளில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கிரினடா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 50 ஓவர்களில் 418 ரன்களை குவித்தது.

Gayle

பிறகு 419 என்கிற நம்ப முடியாத இமாலய இலக்கினை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரரான கெயில் 97 பந்துகளில் 162 ரன்களை குவித்தார் இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 389 ரன்களை குவித்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் மொத்தமாக 46 சிக்ஸர்களை அடிக்கப்பட்டது. அதில், 22 சிக்ஸர்களை இங்கிலாந்து அணியும், 24 சிக்ஸர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடித்தது. மேலும் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 418 ரன்கள் மற்றும் அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 389 ரன்கள் என மொத்தமாக 807 ரன்கள் ஒரே போட்டியில் குவிக்கப்பட்டது.

Hetmyer

மேலும், இங்கிலாந்து வீரரான அடில் ரஷீத் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து தரப்பில் மோர்கன் 103 ரன்களும், பட்லர் 150 ரன்களையும் அதிரடியாக குவித்தார். இந்த போட்டியில் மொத்தமாக 64 பவுண்டரி மற்றும் 46 சிக்ஸர் என 110 பந்துகள் எல்லைக்கோட்டினை கடந்துள்ளன. மொத்தத்தில் இந்த போட்டியினை பார்த்த ரசிகர்கள் ஹைலைட்ஸ் போன்று கண்டுகளித்தார்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Gayle : மீண்டும் தனது அதிரடியை காட்டி ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Raining records at westindies england match

- Advertisement -