சித்தர்கள் மீண்டும் வெளியில் வரப் போகிறார்களா? அதன் அறிகுறி என்ன?

5378
sidhar
- விளம்பரம் -

சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள சித்தர் ஒருவர் விரைவில் போகர் சித்தர்(பழனி முருகன் சிலையை செய்தவர் இவரே) மீண்டும் வரப்போகிறார் என்று கூறியுள்ளார். அவர் எப்போது வருவார்? அவருடன் சேர்ந்து யார் யார் வரப்போகிறார்கள்? அவர்கள் வருவதற்கான அறிகுறிகள் என்ன என்று அந்த சித்தர் கூறியதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

siddhar

கொடிய விஷமுடைய நவபாஷாணங்களை கட்டி அதில் ஒரு அற்புதமான முருகன் சிலையை உருவாக்கிய போகர் சித்தர் வருகிற 2018 ஆம் ஆண்டு மீண்டும் இந்த பூமியில் வந்து இருக்கப்போகிறார் என்று கூறியுள்ளார் அந்த சித்தர். அவர் வரும் வேலையில் சமாதி நிலையில் உள்ள அனைத்து சித்தர்களும் வெளிவருவார்கள் என்றும் கூறியுள்ளார். அதோடு பழங்காலத்தில் சித்தர்கள் சமாதி அடைந்ததும் அதற்கு மேல் சிவன் கோவில் அமைக்கும் ஒரு வழக்கம் இருந்தது. அதில் சில கோவில்கள் இப்போது சிதிலமைந்துள்ளது. அந்த கோவில்கள் அனைத்தும் பொலிவு பெரும் என்றும் அந்த சித்தர் கூறியுள்ளார்.

- Advertisement -

போகர் இந்த பூமியில் வந்து நடமாடுவதற்கு முன்பாகவே சில சித்தர்கள் இங்கு வந்து மக்களோடு மக்களாக கலந்து வாழ்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சித்தர்கள் வர ஆரமித்துவிட்டனர் என்பதற்கு அடையாளமாக கடுமையான மழை பொழுந்து ஒரு சிறிய நாட்டையே உலுக்கிவிடும் ஆனால் அந்நாட்டு மக்கள் அந்த ஆபத்தில் இருந்து தப்பி விடுவார்கள் என்றும், இந்த நிகழ்வு போகர் வருவதற்கு முன்பு, மற்ற சித்த பெருமக்கள் வர தொடங்கிய பின்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

sidhar

அவரின் கூற்றுப்படி பார்த்தால் 2018 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அமெரிக்காவில் அதிபயங்கர புயல் வந்து அந்த நாட்டையே உலுக்கியது. ஆனால் அந்த பேராபத்தில் இருந்து அந்த நாடு தப்பித்தது. இது தான் அவர் கூறிய அறிகுறி என்றால் சித்தர்கள் வர துடங்கிவிட்டனர் என்றே அர்த்தம். ஆனால் அந்த திருநெல்வேலி சித்தர் ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி, அதை நாம் தேவை இல்லாமல் அமெரிக்க புயலோடு ஒப்பிடுகிறோமோ என்ற எண்ணமும் நமக்குள்ளே எழ தான் செய்கிறது.

flood

ஒருவேளை அவர் கூறியதை உண்மையாக இருக்குமாயின், சித்தர்கள் வெளிவர ஆரமித்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் தெய்வீக சக்தி ஓங்க ஆரமிக்கும், அறிவியலில் அளவற்ற புதிய சாதனைகளை தமிழர்கள் படைப்பார்கள். உலகின் தலைசிறந்த ஒரு இடமாக தமிழகம் மாறும். இவற்றில் சில 2018 – 2019 ஆண்டுகளில் நடந்தால் திருநெல்வேலி சித்தர் சொன்னதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

Advertisement