நீங்கள் சரியா செஞ்ஜீ ங்க கிரேட் சார் நீங்க. நேற்றைய போட்டியின் தோல்விக்கு இதுவே காரணம் – வில்லியம்சன் ஓபன் டாக்

kane-williamson

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Team

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன் : இந்திய வீரர்கள் முதல் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து சிறப்பாக மீண்டெழுந்தனர். மேலும், அவர்கள் எங்களை ரன்கள் குவிக்க விடவில்லை எங்களது அணி வீரர்கள் நன்றாக ஆடினார்கள். இருப்பினும் இந்திய அணி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருந்தது.

Krunal

மேலும், கடைசிகட்ட ஓவர்களில் எங்களது அணி இன்னும் 20-30 ரன்கள் எடுத்திருந்தால் 180 அல்லது 190 போன்ற டார்கெட் இருந்திருக்கும். அந்த ரன்கள் மூலம் நாங்கள் இந்திய அணியை வீழ்த்தி இருக்க முடியும். ஆனால், நாங்கள் அதை செய்ய தவறிவிட்டோம். இருப்பினும் நன்றாக பயிற்சி செய்து அடுத்த போட்டியில் எங்களை நிருப்பிபோம் என்று நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

துவண்டு போன என்னை நான் நினைத்தபடி பந்துவீச தோனியே காரணம். அவரால் தான் இன்று இரண்டு போல்டு எடுத்தேன் – கலீல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்