சொன்னதை போன்றே இங்கிலாந்தை திருப்பி அடித்த மே.இ தீவுகள் அணி. 2 ஆவது போட்டியில் வெற்றியை கைப்பற்றியது. கெயில் எவ்வளவு ரன் தெரியுமா ?

Gayle

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (22-02-19) பார்படாஸில் நடைபெற்றது.

Holder

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி முதலில் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை துவங்கியது. சென்ற போட்டியில் சதமடித்த கெயில் இந்த போட்டியில் 50 ரன்களை குவித்தார். மேலும், அந்த அணியின் இளம் வீரரான ஹெட்மயர் சதமடித்து அசத்தினார். இவர்களின் உதவியால் மே.இ தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 289 ரன்களை குவித்தது.

பிறகு 290 ரங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 263 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், மே.இ தீவுகள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டோக்ஸ் 79 ரன்னும், மோர்கன் 70 ரன்னும் அடித்தனர். ஆட்டநாயகன் விருதை ஹெட்மயர் பெற்றார்.

Hetmyer

ஏற்கனவே முதல் போட்டியில் 360 ரன்கள் குவித்தும் மே.இ தீவுகள் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தை சொல்லி அடித்து தொடரில் (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதையும் படிக்கலாமே :

மே.இ மற்றும் இங்கிலாந்து 2ஆவது போட்டி – மிரட்டல் சதமடித்த மே.இ வீரர். தனது காதலிக்காக தான் இப்படி விளையாடுகிறேன் – ஆட்டநாயகன் பேட்டி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்