உங்கள் வீட்டில் ஏசி இல்லை என்றாலும் பரவாயில்லை. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு காத்து வாங்க இந்த ஐடியா ட்ரை பண்ணி பாருங்க.

fan3
- Advertisement -

தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.  உஷ்ணத்தால் இரவு நேரத்தில் நல்ல தூக்கமே இருப்பதில்லை. தலையணையில் தலைவைத்து படுத்தால் தலை முழுவதும் வியர்த்து தலையணை நனைவது தான் மிச்சம். வீட்டில் ஏசி இருப்பவர்கள் அதை பயன்படுத்தி அவர்கள் படுக்கும் அறையை குளிரச் செய்து வைத்துக்கொள்வார்கள். ஏசி இல்லாதவர்கள் ஜில்லென காற்று வாங்க என்ன செய்வது. ஒரு சில சின்ன சின்ன ஐடியாக்கள் இந்த குறிப்பில் உங்களுக்காக.

பொதுவாகவே பகல் நேரத்தில் வீட்டிற்குள் இருப்பதை விட, இரவு நேரத்தில் வீட்டிற்குள் இருப்பதுதான் இப்போது சிரமமாக உள்ளது. காரணம் மாடியிலிருந்து சீலிங் ஃபேன் மூலம் சூடான காற்று உள்ளே இழுக்கப்பட்டு வீடு முழுவதும் அனல் வீசுகின்றது. கூடுமானவரை வீட்டில் சீலிங் ஃபேன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு டேபிள் ஃபேன் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

- Advertisement -

அடுத்தபடியாக நன்றாக வெயில் தாழ்ந்த உடன் நீங்கள் எந்த அறையில் படுக்க போகிறீர்களோ, அந்த அறையில் ஜன்னல் பக்கத்தில் டேபிள் பேனை வெளிப்பக்கம் பார்த்தவாறு வைத்து, ஒரு 1/2 மணி நேரம் ஃபேனை ஓட விடுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய சூடு அனைத்தையும் இழுத்து இந்த டேபிள் பேன் ஜன்னல் வழியாக வெளியே விட்டுவிடும். எக்ஜாஸ் ஃபேன் மெத்தட் தான் இதுவும்.

நீங்கள் எந்த இடத்தில் படுக்கப் போகிறீர்களோ அந்த இடத்தில் ஒரு கார்னர் பகுதியை தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த கார்னரில் அகலமான ஒரு பேசன் அல்லது அகலமான ஒரு தாம்பாளத் தட்டு எதை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாத்திரம் நிரம்ப தண்ணீரை ஊற்றி விடுங்கள். அந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேரை நன்றாக போட்டு பரப்பி கொள்ளுங்கள். இந்த தண்ணீர் இன்னும் குளிர்ச்சியாக ஃப்ரீஸரில் இருக்கும் ஐஸ் கட்டிகளை எடுத்து போட்டுக்கொள்ளலாம். இப்போது குளுகுளுவென ஒரு பாத்திரத்தில் சிறிய குளத்தை தயார் செய்து விட்டோம்.

- Advertisement -

இந்தப் பாத்திரத்திற்கு பின்பக்கமாக ஒரு டேபிள் ஃபேனை வைத்துவிடுங்கள். இப்போது நீங்கள் அந்த டேபிள் ஃபேனை போட்டு விடுங்கள். அந்த டேபிள் ஃபேனிலிருந்து இருந்து வெளிவரக்கூடிய காற்று நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த தண்ணீரை தாண்டி வீசும் போது நமக்கு குளிர்ச்சியாக வரும். அதே சமயம் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். வெட்டிவேர் என்பது இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையை கொடுக்கக்கூடிய ஒரு மூலிகை வேர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நல்ல நறுமணமும் நல்ல குளிர்ச்சியான காற்றும் நம்முடைய உடலுக்கும் மனதிற்கும் இதத்தை தரும்படி அமையும். நீங்கள் தரையில் படிப்பதாக இருந்தால் இந்த செட்டப்பை தரையிலேயே செய்துகொள்ளலாம். கட்டிலின் மீது படுப்பவர்கள் கொஞ்சம் உயரமாக ஒரு டேபிளில் தண்ணீரை வைத்து இந்த செட்டப் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக ஏசி அளவிற்கு குளுகுளு காற்று வீசவில்லை என்றாலும் சூடாக வரக்கூடிய காற்று கொஞ்சம் தணிந்து குளிர்ச்சியான இதமான காற்றை இந்த செட்டப் நிச்சயம் கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் கிடையாது. உங்க வீட்டில் ஏசி இருந்தாலும் கரண்ட் செலவை மிச்சப்படுத்த இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பார்க்கலாம். தவறு கிடையாது.

- Advertisement -